உள்ளடக்கத்துக்குச் செல்

சி. சிறிசற்குணராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியர்
சி. சிறிசற்குணராஜா
S. Srisatkunarajah
பிறப்புசிவக்கொழுந்து சிறிசற்குணராசா
மார்ச்சு 25, 1961 (1961-03-25) (அகவை 64)
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்சி. சிறிசற்குணராஜா
குடியுரிமைஆஸ்திரேலியன் இலங்கையர்
கல்விகல்வியாளர்
படித்த கல்வி நிறுவனங்கள்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கெரியத் - வாட் பல்கலைக்கழகம்
பணிகல்விமான்
பட்டம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்நர்
பதவிக்காலம்ஆகஸ்ட் 28, 2020
முன்னிருந்தவர்ஆர்.விக்னேசுவரன்

சிவக்கொழுந்து சிறிசற்குணராசா (ஆங்கிலம்: Sivakolundu Srisatkunarajah) இவர் ஒரு இலங்கைத் தமிழ் கணிதவியலாளர், கல்வியாளர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ஆவார் .[1]

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

சிறிசற்குணராசா அவர்கள் இலங்கை பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஹாட்லிக் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, [2] இவர் 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 1983 ஆம் ஆண்டு கணிதத்தில் இளம் அறிவியல் நன்மதிப்புப் பட்டம் பெற்றார்.[3][4] மேலும் இவர் பலகோண ஈற்றணுகுகளுக்கான வெப்ப சமன்பாட்டின் வடிவக்கூறுகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையைத் தயாரித்த பிறகு 1988 ஆம் ஆண்டு கெரியட் வாட் பல்கலைக்கழகத்தில் இவர் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் 2004 ஆம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டயமும் பெற்றுள்ளார்.

சிறிசற்குணராசா அவர்களுக்கு ஆத்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vice-Chancellor". Jaffna, Sri Lanka: University of Jaffna. Retrieved 22 October 2017.
  2. "Hartley News - Victoria". Hartley College Global Website. Point Pedro, Sri Lanka: Hartley College Past Pupil Association Victoria. 6 December 2000. Retrieved 31 August 2020.
  3. "Vice Chancellor". Jaffna, Sri Lanka: University of Jaffna. Retrieved 31 August 2020.
  4. "2014/15 Undergraduate Student Handbook" (PDF). Jaffna, Sri Lanka: Faculty of Science, University of Jaffna. p. 60. Retrieved 31 August 2020.
  5. Jeyaraj, D. B. S. (23 July 2016). "Jaffna Varsity Violence: What Really Happened and Why!". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/112967/Jaffna-Varsity-Violence-What-Really-Happened-and-Why-. பார்த்த நாள்: 31 August 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிறிசற்குணராஜா&oldid=4098427" இலிருந்து மீள்விக்கப்பட்டது