சி. சிங்காரவடிவேல்
சி. சிங்காரவடிவேல் | |
|---|---|
| இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் சூன் 18, 1979 – ஆகத்து 22, 1979 | |
| முன்னையவர் | எஸ்.டி.சோமசுந்தரம் |
| தொகுதி | தஞ்சாவூர் |
| பதவியில் 1979–1984 | |
| பதவியில் 1984–1989 | |
| பதவியில் 1989–1991 | |
| பின்னவர் | கி. துளசியா வாண்டையார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 மார்ச்சு 1934 எடமேலையூர், நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் |
| இறப்பு | 31 சனவரி 2022 (அகவை 87) தஞ்சாவூர், தமிழ்நாடு |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | கசுதூரிபாய் |
| பிள்ளைகள் | சி. திருவேரகன் (மகன்), சி. சுமதி (மகள்) |
| பெற்றோர் | சிவானந்தம் (தந்தை), கோவிந்தம்மாள் (எ) தேவகி (தாய்) |
சி. சிங்காரவடிவேல் (S. Singravadivel)(7 மார்ச், 1937 - 31 சனவரி 2022)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இளமையும் கல்வியும்
[தொகு]சிங்காரவடிவேல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வட்டாரத்தில் எடமேலையூர் கிராமத்தில் எஸ். க. சிவானந்தம் சாளுவர் கோவிந்தம்மாள் இணையருக்கு மகனாக 1934 மார்ச் 17இல் பிறந்தார். எடமேலையூரில் உள்ள பள்ளியில் பள்ளிக் கல்வியினைப் படிக்கத் தொடங்கியவர், பின்னர் வடுவூரில் உள்ள இராமவிலாசு நடுநிலைப் பள்ளியில் சேர்ந்தார். இதன் பின்னர் மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 11ஆம் வகுப்பு வரை மன்னார்குடியில் பள்ளிக் கல்வியினை முடித்து திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இடைநிலை வகுப்பினையும், இளங்கலைப் பொருளியல் படிப்பினை 1954ஆம் ஆண்டும், 1956ஆம் ஆண்டு முதுகலை பொருளியல் படிப்பினையும் முடித்தார். இதன் பின்னர் சென்னையிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பினை தொடர்ந்தார்.
வழக்கறிஞராக
[தொகு]சட்டப்படிப்பினை முடித்தப் பின்னர் 1960ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு, சென்னை மற்றும் தஞ்சாவூர் நீதிமன்றங்களில் பணியாற்றினார். புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தார். இவரின் நேர்மை, எளிமை மற்றும் மக்கள் பணியினை பாராட்டி தமிழக அரசு 2012ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கி கௌரவித்தது.[2][3]
அரசியல்
[தொகு]சிங்காரவடிவேல் முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்திற்கு 1979ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை இடைத்தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பதவியினை சூன் 18, 1979 முதல் ஆகத்து 22, 1979 வரை குறுகிய காலமே வகித்தார்.[4] இதன் பின்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் மீண்டும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 1984 வரை முழு மக்களவைக் காலமும் பதவிவகித்தார். இதனைத் தொடர்ந்து 1984ஆம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது மக்களவைக்கானத் தேர்தலிலும், 1989ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினரானார்.[5][6][7]
அரசியல் செயல்பாடு
[தொகு]1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சி. சிங்காரவடிவேல் | 3,71,967 | 56.37% | 1.02% | |
| தி.மு.க. | எஸ். எஸ். பழனிமாணிக்கம் | 2,74,820 | 41.64% | 2.43% | |
| பாமக | கேசவன் கோதை | 7,617 | 1.15% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 97,147 | 14.72% | -1.42% | ||
| பதிவான வாக்குகள் | 6,59,912 | 72.55% | -6.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 9,20,496 | 26.89% | |||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 1.02% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சி. சிங்காரவடிவேல் | 3,06,351 | 55.35% | ||
| தி.மு.க. | எஸ். எஸ். பழனிமாணிக்கம் | 2,17,030 | 39.21% | ||
| இதேகா (செ) | எம். சுப்பிரமணியம் | 30,089 | 5.44% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 89,321 | 16.14% | 7.35% | ||
| பதிவான வாக்குகள் | 5,53,470 | 79.47% | 1.87% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 7,25,425 | 9.81% | |||
| காங்கிரசு கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 2.41% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சி. சிங்காரவடிவேல் | 2,68,382 | 52.94% | ||
| அ.இ.அ.தி.மு.க. | க. தங்கமுத்து | 2,23,843 | 44.15% | -16.02% | |
| சுயேச்சை | கே. ஆம்லாபட்டு சுப்பையன் | 8,867 | 1.75% | ||
| காங்கிரசு | எ. சேதுமாதவம் | 4,359 | 0.86% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 44,539 | 8.79% | -11.56% | ||
| பதிவான வாக்குகள் | 5,06,949 | 77.60% | 0.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 6,60,633 | 4.36% | |||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -7.23% | |||
இறப்பு
[தொகு]கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, சனவரி 31, 2022 அன்று காலமானார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SINGARAVADIVEL, SHRI SIVANANDAM".
- ↑ "மக்களவை உறுப்பினர்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2022/feb/01/former-lok-sabha-member-dies-of-corona-infection-3784006.html.
- ↑ "மக்களவை உறுப்பினர்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/762950-i-am-saddened-by-the-news-of-the-death-of-senior-congress-leader-singaravadivel-cm-stalin-s-condolences-1.html.
- ↑ இரு திசை நீதி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை (முதலாவது பதிப்பு ed.). சிவம் பதிப்பகம், தஞ்சாவூர். 2026. pp. 97–113. ISBN 9788199726178.
- ↑ "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2017-06-30.
- ↑ "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2017-06-30.
- ↑ "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2017-06-30.
- ↑ "முன்னாள் காங்கிரஸ் எம்.பி காலமானார்.. தமிழக அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி !!!".