சி. கே. துர்கா
சி. கே. துர்கா | |
|---|---|
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் நாரி சக்தி விருது பெறும் துர்கா (2017) | |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி | இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் முதுநிலை (அறுவையியல்) |
| பணி | அறுவைசிகிச்சை நிபுணர், புற்றுநோயியல் |
| அறியப்படுவது | புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் |
| விருதுகள் | நாரி சக்தி விருது (2018) |
சி. கே. துர்கா (C. K. Durga) ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணரும் புற்றுநோயியல் நிபுணரும் ஆவார். இவர் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை நுட்பத்தை உருவாக்கினார். இது ஒரே நேரத்தில் புற்றுநோயை அகற்றி, நோயாளியின் சொந்தத் திசுக்களைப் பயன்படுத்தி மார்பகத்தை மறுகட்டமைக்கிறது.[1] இது உலகளவில் அறுவை சிகிச்சை நிபுணர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களின் ஆரோக்கியத்திற்கான இவருடைய பங்களிப்புகளுக்காக, குறிப்பாக மார்பகப் புற்றுநோய் குறித்த இவரது விரிவான ஆராய்ச்சிக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.[2][3]
இந்திய அரசால் வழங்கப்படும் இந்தியாவின் மிக உயர்ந்த பெண்களுக்கான விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதை 2018-ஆம் ஆண்டு துர்க்காப் பெற்றார்.[4]
வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]துர்கா தனது இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் பட்டம் பெற்ற பின்னர் 1981-இல் தனது முதுநிலை (அறுவை சிகிச்சை) படிப்பினை முடித்தார்.[5] இவர் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் மூத்த மருத்துவராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1987-இல் ஒரு புற்றுநோய் நிபுணரானார்.[6] தற்போது, இவர் சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுநிலை நிறுவனத்தில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராகப் பதவி வகிக்கிறார். மேலும் புது தில்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத் துறையின் ஆலோசகராகவும் தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் இந்திய அறுவை சிகிச்சை ஆய்விதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். மேலும் 2018 முதல் தில்லியைச் சேர்ந்த இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[7]
2017-ஆம் ஆண்டில், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தில்லி பிரிவின் தலைவராக துர்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] அதே ஆண்டு இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தால் சிறந்த மாநில பிரிவு விருதைப் பெற்றார்.[7] புற்றுநோய் ஆராய்ச்சியில் ஏராளமான மாணவர்களுக்கு இவர் வழிகாட்டியுள்ளார். புற்றுநோய் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு திட்டங்களை நடத்தியுள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Engineer, Rayomand (March 8, 2018). "Judge, Doctor, Scholar, Conservationist: 10 Women Honored at Rashtrapati Bhavan". The Better India. https://thebetterindia.com/133733/judge-doctor-scholar-conservationist-10-women-honored-rashtrapati-bhavan/.
- ↑ 2.0 2.1 "Meet Dr. C.K. Durga, #NariShakti Puraskar 2017 awardee. She has contributed immensely in the field of women's health through her extensive research on Breast Cancer and developed a path-breaking technique in Breast Cancer Surgery" (Tweet). March 7, 2018. Missing or empty |user= (help); Missing or empty |number= (help)
- ↑ Ministry of Women and Child Development (March 10, 2018). "Dr. C.K. Durga, Consultant, Professor & HOD (Surgery) at Dr.R.M.L Hospital. has done prolific work to counter Breast Cancer. Our #NariShakti Puraskar 2017 Awardee says, My passion towards my work keeps me going !". https://www.facebook.com/watch/?.
- ↑ "On International Women's Day, the President conferred the prestigious Nari Shakti Puraskars to 30 eminent women and 9 distinguished Institutions for the year 2017". archive.pib.gov.in. 2018-03-08. Archived from the original on 6 May 2021.
- ↑ "Dr. C. K. Durga" (PDF). Dr. Ram Manohar Lohia Hospital. Retrieved 31 May 2024.
- ↑ "RML Hospital to get first woman as chief". https://www.pressreader.com/india/the-asian-age/20170405/282424169069518.
- ↑ 7.0 7.1 "Curriculum Vitae" (PDF). Association of Surgeons of India. Retrieved May 31, 2024.
- ↑ "Past President Secretaries". Association of Surgeons of India. Retrieved May 31, 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- சி.கே. துர்கா - நாரி சக்தி விருது பெற்றவர் ( மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட காணொளி)