சி. குழந்தை அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. குழந்தை அம்மாள்
C. Kolandai Ammal
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் சூலூர்
பதவியில்
1957–1967
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-06-10)10 சூன் 1924
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சி. குழந்தை அம்மாள் (C. Kolandai Ammal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார். எழுத்தாளர், ஒளிபரப்பாளர், தமிழ்நாட்டில் உள்ள இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதி என பன்முகங்களுடன் இவர் செயல்பட்டார். இரண்டு முறை சென்னை சட்டமன்றத்தில் (1957-67) பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குழந்தை அம்மாள் 10 ஜூன் 1924 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதியன்று பிறந்தார். சர்வசன உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் அண்ணாமலைநகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[1]

தொழில்[தொகு]

குழந்தை அம்மாள், 1951 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். கோயம்புத்தூர், நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும் சாந்தலிங்க சுவாமிகள் தமிழ் கல்லூரியில் தமிழ் மொழி விரிவுரையாளராகவும் இருந்தார். அனைத்திந்திய வானொலியின் வழக்கமான ஒலிபரப்பாளராக இருந்ததோடு 'அறம் வளர்த்த மங்கையர்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.[1]

சென்னை மாநில சட்டமன்றத்திற்கு, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது சூலூர் தொகுதியில் குழந்தை அம்மாளை இந்திய தேசிய காங்கிரசு கட்சி அறிவித்தது. அப்போது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (சிபிஐ) வேட்பாளரை தோற்கடித்து இவர் சட்டமன்றத்தில் நுழைந்தார்.[2] அடுத்த தேர்தலிலும் (1962) இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் அதே பொதுவுடமைக் கட்சியின் அரசியல்வாதியை தோற்கடித்தார்.[3] 1967 தேர்தலில் இவர் மொடக்குறிச்சி தொகுதியில் நின்று சுதந்திராக் கட்சி வேட்பாளர் நல்லசிவமிடம் தோல்வியுற்றார் [4] சட்டமன்ற உறுப்பினராக இவர் மக்கள்தொகை கட்டுப்பாடு, பட்டியல் சாதியினர், விவசாயிகள் மற்றும் பெண்கள் நலனுக்காக வாதிட்டார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

குழந்தை அம்மாள் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Tamil Nadu Legislative Assembly—Who's Who 1957. Chennai, Tamil Nadu: தமிழ்நாடு அரசு. 1957. பக். 187–88. http://www.assembly.tn.gov.in/archive/2nd_1957/whoiswho_1957.pdf. பார்த்த நாள்: 30 November 2017. Tamil Nadu Legislative Assembly—Who's Who 1957 (PDF). Chennai, Tamil Nadu: Government of Tamil Nadu. 1957. pp. 187–88. Retrieved 30 November 2017.
  2. "Statistical Report on the General Election, 1957 to the Legislative Assembly of Madras" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 178. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  3. "Statistical Report on the General Election, 1962 to the Legislative Assembly of Madras" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  4. "Statistical Report on the General Election, 1967 to the Legislative Assembly of Madras" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  5. "Women Legislators in the Madras Legislative Assembly" (PDF). Shodhganga. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._குழந்தை_அம்மாள்&oldid=3747608" இலிருந்து மீள்விக்கப்பட்டது