சி. உமாசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.உமாசங்கர்
பிறப்புதமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
பணிஇந்திய ஆட்சிப்பணி அதிகாரி
சமயம்கிறித்தவர்

சி.உமாசங்கர் (C.Umashankar) தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். 1990 ஆம் ஆண்டு துணை மாவட்ட ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான மயிலாடுதுறையின் துணை மாவட்ட ஆட்சித் தலைவராக பணியைத் துவங்கினார். இவருடைய பணியின் நன்னடத்தையில் அதிருப்தி ஏற்பட்டதால் அரசியல் ஆட்சியாளர்களால் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் 1995 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக ஆட்சியாளர்களான அதிமுகவால் மதுரையின் கூடுதல் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் சிறுசேமிப்புத்துறை ஆணையராக பதவியில் இருந்த இவர் 2010 ஆம் ஆண்டு சூலை மாதம் 21 ஆம் திகதி அன்று திமுகஅரசால் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

வெளிக்கொண்டுவந்த ஊழல்கள்[தொகு]

1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை அதிமுகவின் ஜெ. ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் [1] இருந்த டி. எம். செல்வகணபதி சுடுகாட்டு கூறை வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட காரணமாக இருந்தார். [2] பின்னர் அரசு கேபிள் இயக்குனராக நியமிக்கப்பட்ட இவர் முரசொலி மாறனின் மகன்களும் சன் தொலைக்காட்சியின் இயக்குனர்களுமான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் போன்றோர் மீது அரசு கேபிள் முறைகேடுக்காக இவரே முன்வந்து ஊழல் குற்றச்சாட்டு கொடுத்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._உமாசங்கர்&oldid=3243833" இலிருந்து மீள்விக்கப்பட்டது