சி. ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி. ஆறுமுகம் மதுராந்தகத்தார் என்ற பெயரால் பிரபலமானவர். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார். இவர் திமுக சார்பாக மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில், 1971, 1977, 1984 சட்டமன்றத் தேர்தல்களில், போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இவர் 1971 முதல் 1993 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தின் கட்சிச் செயலாளராகப் பணிபுரிந்தார். இவர் அக்கட்சித் தலைவர் மு. கருணாநிதியுடன் மிகுந்த நெருக்கமாக இருந்தார். அக்கட்சி அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆறுமுகம்&oldid=2587456" இருந்து மீள்விக்கப்பட்டது