சி. ஆண்டித் தேவர்
தோற்றம்
சி. ஆண்டித் தேவர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | பா. கா. மூக்கைய்யாத்தேவர் |
| பின்னவர் | பி. கே. எம். முத்துராமலிங்கம் |
| தொகுதி | உசிலம்பட்டி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூன் 1934 பி. காலப்பன்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு |
| வாழிடம் | நாடார் வித்யாசாலை தெரு, மதுரை |
| தொழில் | வழக்கறிஞர் |
சி. ஆண்டித் தேவர் (S. Andi Thevar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பி. காலப்பன்பட்டியில் 1934-ஆம் ஆண்டு சூன் 1-ஆம் நாள் பிறந்தார். பள்ளிக் கல்வியினை உசிலம்பட்டியில் முடித்த ஆண்டித் தேவர், கல்லூரிக் கல்வியினைப் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், சட்டக் கல்வியினை சென்னை சட்டக் கல்லூரியிலும் முடித்தார். அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியினைச் சேர்ந்த இவர், 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]