சி. அன்பழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. அன்பழகன் (S. Anbalagan)(பிறப்பு செப்டம்பர் 7, 1949) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நாமக்கல் மாவட்டம் கணேசபுரத்தினைச் சேர்ந்தவர். முதுகலைப் பட்டதாரியான அன்பழகன் நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 10 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியரகப் பணியாற்றியுள்ளார். 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குந் நடைபெற்றத் தேர்தலில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டு உறுப்பினராக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2009ஆம் ஆண்டு அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தற்பொழுது அன்பழகன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைத்தலைவர் (தலைவராக கூடுதல் பதவி) வகிக்கின்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._அன்பழகன்&oldid=3502127" இருந்து மீள்விக்கப்பட்டது