சி.டி.நாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

சி.டி.நாயகம் தந்தை பெரியாரிடம் மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டு சமூகப்புரட்சியில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 07.10.1878 ஆம் ஆண்டு பிறந்தார். குலசேகரன்பட்டினத்திலேயே கல்வி கற்ற நாயகம் அவர்கள் 1899 ஆம் ஆண்டு சேரன்மாதேவியைச் சேர்ந்த தாயம்மை அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வியாபார நிமித்தமாக பெங்களூரில் குடியேறி வாழ்ந்தார்.

பெண் கல்வியில் தீவிர ஆர்வம்[தொகு]

அப்போதே பெண்களின் கல்வியில் தீவிர ஆர்வம் இருந்ததால் தனது மனைவி தாயம்மை அம்மையாரை மேல்படிப்பு படிக்கச் செய்தார். எதிர்பாராத விதமாக அவரது மனைவியார் இறந்து விட்டதால் அவரது நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது.

சென்னை வந்த சி.டி.நாயகம்[தொகு]

அவர் 1902 ஆம் ஆண்டு முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சிதம்பரம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். தனது முதல் மனைவி தாயம்மாள் அம்மையாரைப் போன்றே சிதம்பரம் அம்மையாரையும் மேல்படிப்பு படிக்க வைத்தார்.

இந்நூலின் பிரிவுகள்[தொகு]

பாண்டியன்-இராமசாமி கமிட்டியில் சி.டி.நாயகத்தின் பங்களிப்பு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மறக்கக் கூடாத மாமனிதர் கல்வி ஒளி தந்தவர்

சி.டி.நாயகத்தின் சிறப்பு[தொகு]

பிற மக்களுக்காக உயர்வுக்காக தன்னை முன்னிலைப்படுத்தாமல் உழைத்த பெருந்தகை சி.டி.நாயகம் ஆவார்.நீதிக்கட்சியிலும் பின்னர் சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டு எளிமையாக வாழ்ந்தவர். பிற மக்களின் கல்விக்காக சிந்தித்து தான் பணியிலிருந்த காலத்தில், தான் சார்ந்த துறையில் வேலை வாய்ப்பு உருவாகும் போது அதை விளிம்பு நிலை மக்களுக்காக ஒதுக்கியவர். தனது இறுதிக்காலம் வரை தந்தை பெரியாருடன் சுயமரியாதைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சி.டி.நாயகம் அவர்கள் 13.12.1944 இல் மறைவுற்றார்.

சான்றாதாரம்[தொகு]

சி.டி.நாயகம்(நவம்பர் 20-2016).தந்தை பெரியார் திராவிட கழக வெளியீடு, சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை-642126.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி.டி.நாயகம்&oldid=2392844" இருந்து மீள்விக்கப்பட்டது