விழுத்தொடர் பாணித் தாள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சி.எஸ்.எஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Cascading Style Sheets (CSS)
Filename extension .css
Internet media type text/css
Developed by World Wide Web Consortium
Initial release 17 டிசம்பர் 1996
Type of format Style sheet language
Standard(s) Level 1 (Recommendation)
Level 2 (Recommendation)
Level 2 Revision 1 (Recommendation)

விழுத்தொடர் பாணித் தாள்கள் (சி.எசு.எசு) (Cascading Style Sheets (CSS)) என்பது ஒரு ஆவணத்தின் உள்ளடக்கத்தை எப்படி வலைப்பக்கத்தில் தோற்றிவிப்பது என்பதை வரையறை செய்யும் குறியீட்டு மொழி ஆகும். ஒரே உள்ளடக்கத்துக்கு வெவ்வேறு தோற்றத்தை இலகுவாகத் தெரிவு செய்ய இது ஏதுவாகிறது.

தொடக்கத்தில் ஒரு வலைப்பக்கத்தின் தோற்றமும் அதன் உள்ளடக்கமும் (உரை) ஒரே குறியீட்டு முறையினால் குறிக்கப்பட்டது. இது ஆக்க, பராமரிக்க, சீரான தோற்றத்தைத் தரச் சிரமாக இருந்தது. அதன் பின்னரே உள்ளடக்கமும் அதன் தோற்றப்பாடும் பிரிக்கப்பட்டது.