சிவ பகவதி கோவில், அகிங்கம்
சிவ பகவதி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
அமைவு: | அகிங்கம், அனந்தநாக், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
ஆள்கூறுகள்: | 33°42′N 75°20′E / 33.70°N 75.33°E |
கோயில் தகவல்கள் |
பிரபஞ்ச நாயகியான சிவபகவதியின் (Shiva Bhagwati Temple Akingam) கோயில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிரபலமான கோயில்.[1] .
சிவ பகவதியின் சன்னதி கிராமத்தின் உச்சியிலே, தேவதாரு மரங்களும், மேய்ச்சல் நிலங்களும் நிறைந்த ஒரு பெரிய காடுகளின் அடிவாரத்திலே அமைந்துள்ளது. இக்கோயில் மெயின் சவுக் அகிங்கமில் இருந்து 250 மீட்டர் தொலைவிலும், ஜி. எச். எச். எஸ். (கல்வி நிறுவனம்) அகிங்கமிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள நான்கு கோவிலில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் ஜாகீர் என்ற வன நிலத்திற்குச் சொந்தமான ஒரு பகுதியை வருவாய்ப்பதிவினுள் ஒதுக்கியுள்ளது.
விழாக்கள்
[தொகு]ஒவ்வொரு ஆண்டும் பகவதி ஜி நாள் மத ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் கொண்டாடப்படுகின்றது. இந்நாளினைக் கொண்டாடும் பொருட்டு காஷ்மீரி குடிகளாகிய பண்டிதர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்நாட்களில் இவ்விழா பொலிவிழந்து காணப்படுகிறது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deities". ikashmir.
- ↑ "Breng Pargana". Kashmir as it is.