உள்ளடக்கத்துக்குச் செல்

சிவ தாண்டவ தோத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவ தாண்டவ தோத்திரம் இராவணனால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும்[1] புகழ்பெற்ற துதி ஆகும். இது சிவபெருமானின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் சங்கத மொழிப்பாடலாக விளங்குகின்றது. தாளம் போடவைக்கும் நடையும் எதுகை மோனையும் இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ள அதே வேளை, அதில் மயங்கி ஈசனே நடனமாடுவார் என்ற பொருளில் "சிவ தாண்டவ தோத்திரம்" எனும் பெயர் காரணப் பெயராகவும் அமைகின்றது.


வரலாறு[தொகு]

செருக்கோடு கயிலையைத் தூக்கி, அதன்கீழ் நசுங்குண்ட இராவணன், அதிலிருந்து மீள்வதற்காக இத்துதியைப் பாடி, ஈசனைக் குளிர்வித்ததாகச் சொல்லப்படுகின்றது, இத்துதியைப் பாடியபின்னர் தான், "சந்திரகாசம்" எனும் புகழ்பெற்ற வாளை, அவனுக்குச் சிவன் வழங்கினார்.[2]

பாடல்[தொகு]

சங்கத இலக்கியத்தின் படி, "பஞ்சசாமர சண்டம்" எனும் பதினாறு வரிகள் கொண்ட பாடலாக இது அமைந்துள்ளது. சிவ தாண்டவ தோத்திரத்தின் இறுதி சுலோகத்தில் வருகின்ற "எப்போது நான் மகிழ்வோடு இருப்பேன்?" என்ற ஏக்கம் மிகுந்த வினா, இந்நாளைய பக்தர்களுக்கும் பொருந்துவதாக அமைகின்றது.


सार्थशिवताण्डवस्तोत्रम्
ஸ்ரீ சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
श्रीगणेशाय नमः
ஓம் கணேசாய நமஹ.

தேவநாகரி
जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले
गलेऽवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम् |
डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं
चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् ||१||

தமிழ்
ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்
டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்
சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம் 1 |

அடர்ந்த காடு போன்ற திருச்சடையிலிருந்து பொங்கும் நீரால் நனைக்கப்படும் அவன் திருக்கழுத்தில், இராசநாகம் மாலை போல் சுழன்றாட, "டம டம" என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி திருக்கூத்தாடும் சிவன், அவன் அருள் மழையை எங்கும் பொழிக!

தேவநாகரி
जटाकटाहसम्भ्रमभ्रमन्निलिम्पनिर्झरी
विलोलवीचिवल्लरीविराजमानमूर्धनि |
धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके
किशोरचन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम ||२||

தமிழ்
ஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமண் ணிலிம்ப நிர்ஜரீ
விலோல வீச்சி வல்லரீ விராஜ மான மூர்த்தனி
தகத் தகத் தகஜ் ஜ்வலல் லலாட பட்ட பாவகே
கிஷோர சந்த்ர ஷேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம 2

சுருள்சடையாலான குளத்தில் அலைவீசி ஆடும் கங்கையும், திருநெற்றியில் கனல் வீசும் தீயையும், இளம்பிறையை அணிகல்னாகவும் கொண்டுள்ள சிவனை நான் போற்றுகின்றேன்.

தேவநாகரி
धराधरेन्द्रनंदिनीविलासबन्धुबन्धुर
स्फुरद्दिगन्तसन्ततिप्रमोदमानमानसे |
कृपाकटाक्षधोरणीनिरुद्धदुर्धरापदि
क्वचिद्दिगम्बरे(क्वचिच्चिदम्बरे) मनो विनोदमेतु वस्तुनि ||३||

தமிழ்
தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே
க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி
க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி 3

பரந்த ஞாலத்தின் உயிர்களெல்லாம் வாழத் திருவுளம் கொண்டவனும், மலையரசன் மகளுடன் மகிழ்ந்தாடுபவனும், தன் கடைக்கண்ணோக்கால், துன்பமெல்லாம் தீர்ப்பவனும், திக்குகளையே ஆடையாய் அணிந்து அம்மணமாய்த் திரிபவனுமான சிவனைக் கண்டு, நான் உளம் மகிழ்கிறேன்.

தேவநாகரி
जटाभुजङ्गपिङ्गलस्फुरत्फणामणिप्रभा
कदम्बकुङ्कुमद्रवप्रलिप्तदिग्वधूमुखे |
मदान्धसिन्धुरस्फुरत्त्वगुत्तरीयमेदुरे
मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि ||४||

தமிழ்
ஜடா புஜங்க பிங்கள ஸ்புரத் பணா மணி ப்ரபா
கடம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூ முகே
மதாந்த ஸிந்து ரஸ்புரத் வகுத்தரீ யமேதுரே
மனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி 4

வாழ்க்கைக்கு ஆதாரமானவனும், கொடியொத்த கழுத்து நாகத்தின் செங்கபில நிற நாகமாணிக்கம் எங்கும் ஒளிவீசித் தென்படத் திகழ்பவனும், பல திசைகளும் நிறைந்து (உன்னைப் போற்றும்) மாதரின் முகங்களில், அந்த மாணிக்கத்தின் கதிர்கள் பலவண்ணக் கோலமிடவும், மதயானையின் உருபோர்த்து அருளொளி வீச அமர்ந்திருப்பவனுமாகிய சிவனைக் கண்டு என்னுள்ளம், களித்தாடுகின்றது.

தேவநாகரி
सहस्रलोचनप्रभृत्यशेषलेखशेखर
प्रसूनधूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभूः |
भुजङ्गराजमालया निबद्धजाटजूटक
श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखरः ||५||

தமிழ்
ஸஹஸ்ர லோச்சன ப்ரப்ருத் யசேஷ லேக சேகர
ப்ரஸூன தூளி தோரணீ விதூ ஸராந்த்ரீ பீடபூஃ
புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக
ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகர 5

சகோரப்பறவையின் தோழனை (நிலா) தலையணிகலனாகக் கொண்டவனும், செந்நாகத்தால் கட்டிய திருச்சடையைக் கொண்டவனும், அரி - இந்திராதி தேவர்களின் தலையிலிருந்து விழுந்த மலர்களின் மகரந்தத் தாதினால் சாம்பல் நிறமாகக் காணப்படும் பாதங்களை உடையவனுமான ஈசன் எமக்கு சகல வளங்களும் நல்குக.

தேவநாகரி
ललाटचत्वरज्वलद्धनञ्जयस्फुलिङ्गभा
निपीतपञ्चसायकं नमन्निलिम्पनायकम् |
सुधामयूखलेखया विराजमानशेखरं
महाकपालिसम्पदेशिरोजटालमस्तु नः ||६||

தமிழ்
லலாட சத்வர ஜ்வலத் தனஞ்ஜய ஸ்புலிங்க பா
நிபீத பஞ்ச ஸாயகம் நமன் னிலிம்ப நாயகம்
சுதா மயூக லேகயா விராஜமான சேகரம்
மஹா கபாலி ஸம்பதே ஸிரோ ஜடா லமஸ்துனஃ 6

இளம்பிறை சூடிய அழகனும், காமனைக் காய்ந்த நுதல்விழிகோண்டவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனு்மான ஈசனின்ன் திருச்சடையைப் பணிந்து நாம் சகல சித்திகளையும் அடைவோமாக

தேவநாகரி
करालभालपट्टिकाधगद्धगद्धगज्ज्वल
द्धनञ्जयाहुतीकृतप्रचण्डपञ्चसायके |
धराधरेन्द्रनन्दिनीकुचाग्रचित्रपत्रक
प्रकल्पनैकशिल्पिनि त्रिलोचने रतिर्मम |||७||

தமிழ்
கராள பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வல
தனஞ்ஜயாம் ஹுதீ க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே
தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக
ப்ரகல்பனைக ஸில்பினி த்ரிலோச்சனே ரதிர் மம 7

முக்கண்ணனும், நுதல்விழியிலிருந்து தகதகவென எரியும் தீயால், காமனை எரித்தவனும், மலையரசன் மகளின் மார்பில் தொய்யில் எழுதி மகிழ்பவனுமான ஈசனைப் பணிகின்றேன்.

தேவநாகரி
नवीनमेघमण्डली निरुद्धदुर्धरस्फुरत्
कुहूनिशीथिनीतमः प्रबन्धबद्धकन्धरः |
निलिम्पनिर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुरः
कलानिधानबन्धुरः श्रियं जगद्धुरंधरः ||८||

தமிழ்
நவீன மேக மண்டலீ நிருத்த துர்தர ஸ்புரத்
குஹூ நிஷீதி நீதமஃ ப்ரபந்த பந்த கந்தரஃ
நிலிம்ப நிர்ஜரீ தரஸ் தனோது க்ருத்தி சிந்துரஃ
கலா நிதான பந்துரஃ ஸ்ரியம் ஜகத் துரந்தரஃ 8

உலகெலாம் தாங்குபவனும், பிறையணி அழகனும், பொன்னார் மேனியனும், கங்கையணி வேணியனும், முகில் நிறைந்த இரவை ஒத்த கருநிறக் கழுத்தனுமான ஈசன் எமக்கு மங்கலம் அருள்க!

தேவநாகரி
प्रफुल्लनीलपङ्कजप्रपञ्चकालिमप्रभा
वलम्बिकण्ठकन्दलीरुचिप्रबद्धकन्धरम् |
स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं
गजच्छिदांधकच्छिदं तमन्तकच्छिदं भजे ||९||

தமிழ்
ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா
வலம்பி கண்ட கண்டலீ ருசிப் ரபத்த கந்தரம் |
ஸ்மர்ச்சிதம் புரஸ்ச்சிதம் பவஸ்ச்சிதம் மகச்சிதம்
கஜச்சி தாந்தக ச்சிதம் தமந்தக ச்சிதம் பஜே 9

உலகன் கரும்பாவன்கள், மலர்ந்த நீலத்தாமரைகள் எனக் காட்சியளிக்கும் கறைக்கண்டனும், மதனனை எரித்தவனும், முப்புரம் காய்ந்தவனும், பற்றுக்களை அறுப்பவனும், தக்க வேள்வியை அழித்தவனும், அந்தகனை வதைத்தவனும், கயாசுரனை அழித்தவனும் இயமனை உதைத்தவனும் ஆன ஈசனைப் பணிகின்றோம்.

தேவநாகரி
अखर्व(अगर्व) सर्वमङ्गलाकलाकदम्बमञ्जरी
रसप्रवाहमाधुरी विजृम्भणामधुव्रतम् |
स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं
गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे ||१०||

தமிழ்
அகர்வ ஸர்வ மங்களா கலா கதம்ப மஞ்ஜரீ
ரஸ ப்ரவாஹ மாதுரீ விஜ்ரும்பணா மது வ்ரதம்
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்தகாந்த காந்தகம் தமாந்த காந்தகம் பஜே 10

வண்டார்க்கும் கடம்ப மலர்களைச் சூடியவனும், மதனன், முப்புரம், பற்றுக்கள் வேள்சி, அந்தகன், கயாசுரன், இயமன் ஆகியோரை ஒழித்தவனுமான ஈசனைப் பணிகின்றோம்.

தேவநாகரி
जयत्वदभ्रविभ्रमभ्रमद्भुजङ्गमश्वस
द्विनिर्गमत्क्रमस्फुरत्करालभालहव्यवाट् |
धिमिद्धिमिद्धिमिध्वनन्मृदङ्गतुङ्गमङ्गल
ध्वनिक्रमप्रवर्तित प्रचण्डताण्डवः शिवः ||११||

தமிழ்
ஜயத் வதப்ர விப்ரம ப்ரமத் புஜங்க மஸ்வஸ
த்வினிர்க மத்க்ரம ஸ்புரத் கராள பால ஹவ்ய வாத்
திமித் திமித் திமித் வனன் ம்ருதங்க துங்க மங்கள
த்வனி க்ரம ப்ரவர்தித ப்ரச்சண்ட தாண்டவஃ சிவஃ 11

திமிதிமி என மிருதங்கம் ஒலியெழுப்ப, அதற்கு இசைந்தாடுபவனும், நுதல்விழியில் தீயைக் கொண்டவனும், தீகக்கும் மூஉச்சைக் கொண்ட நாகம் சீறத் திகழ்கின்றான் சிவன்.

தேவநாகரி
दृषद्विचित्रतल्पयोर्भुजङ्गमौक्तिकस्रजोर्
गरिष्ठरत्नलोष्ठयोः सुहृद्विपक्षपक्षयोः |
तृणारविन्दचक्षुषोः प्रजामहीमहेन्द्रयोः
समं प्रव्रितिक: कदा सदाशिवं भजम्यहम ||१२||

[{தமிழ்]]
த்றுஷத் விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்திக ஸ்ரஜோர்
கரிஷ்ட ரத்ன லோஷ்டயோஃ சூக்ருத் விபக்ஷ பக்ஷயோஃ
த்ருணாரவிந்த சக்ஷுஸோ ப்ரஜா மஹீ மஹேந்த்ரயோஃ
ஸமாம் ப்ரவர்திகஃ கடா சதாசிவம் பஜாம்யஹம் 12

மக்களையும் மன்னனையும் நான் ஒன்றாகப் பார்ப்பதெப்போ? புல்லொத்த விழிகளையும் தாமரைக் கண்ணையும் நான் ஒன்றாகக் காண்பதெப்போ? நண்பரையும் எதிரிய்யையும் நான் ன்றாக எண்ணுவதெப்போ? மணியையும் மண்ணையும் ஒன்றெனச் சொல்வதெப்போஒ? மாலையையம் பாம்பையும் ஒன்றெனச் சூடுவதெப்போ? சொல்க என் இறைவா!

தேவநாகரி
कदा निलिम्पनिर्झरीनिकुञ्जकोटरे वसन्
विमुक्तदुर्मतिः सदा शिरः स्थमञ्जलिं वहन् |
विलोललोललोचनो ललामभाललग्नकः
शिवेति मंत्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम् ||१३||

தமிழ்
கதா நிலிம்ப நிர்ஜரீ நிகுஞ்ச கோதரே வஸன்
விமுக்த துர்மதி ஸதா ஸிரஃ ஸ்த மஞ்சலிம் வஹன்
விலோல லோல லோச்சனோ லலாம பால லக்னகஃ
சிவேதி மந்த்ர முச்சரண் கதா ஸுகீ பவாம் யஹம். 13

கங்கைக் கரைக் குகையில் நான் வாழ்வதெப்போ? என்னேரமும் சிரமேல் கைதூக்கி, என் கொடுங்குணங்கள் கரைந்தோடுமாறு உன் நாமங்களைச் சொல்லி நான் மகிழ்ச்சியாக இருப்பதேப்போ? அதிரும் நுதல்விழி கொண்டவனே, சொல்க.

தேவநாகரி
इदम् हि नित्यमेवमुक्तमुत्तमोत्तमं स्तवं
पठन्स्मरन्ब्रुवन्नरो विशुद्धिमेतिसंततम् |
हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं
विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिंतनम् ||१४||

தமிழ்
இமம் ஹி நித்யமேவ முக்த முத்தமோத்தமம் ஸ்தவம்
பதன் ஸ்மரண் ப்ருவண் நரோ விசுத்தி மேதி ஸந்ததம்
ஹரே குரௌ ஸுபக்தி மாசு யாதி நான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸு சங்கரஸ்ய சிந்தனம். 14

இம்மேலான துதியைப் பாடுவோர், ஞானகுருவாம் சிவனின் அருளும், புனிதமும் பெறுவர். அறியாமை நீங்கி சங்கரன் அருளைப் பெற, இதைவிட வேறு இலகுவான வழியில்லை.

தேவநாகரி
पूजावसानसमये दशवक्त्रगीतं
यः शम्भुपूजनपरं पठति प्रदोषे |
तस्य स्थिरां रथगजेन्द्रतुरङ्गयुक्तां
लक्ष्मीं सदैव सुमुखिं प्रददाति शम्भुः ||१५||

தமிழ்
பூஜா வசான ஸமயே தச வக்த்ர கீதம்
யஃ ஸம்பு பூஜானா பரம் பததி ப்ரதோசே
தஸ்ய ஸ்திராம் ரத் கஜேந்த்ர துரங்க யுக்தம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஸம்புஃ 15

தினமும் மாலையில், பிரதோச வேளையில், பூசையின் முடிவில், தசவக்கிரன் பாடிய இச்சிவதுதியைக் கூறி ஈசனைத் தியானிப்போர், திருமகளும், நாற்படையும் சூழ வளங்கொண்டு விளங்குவாராக.

தேவநாகரி
इति श्रीरावण-कृतम्
शिव-ताण्डव-स्तोत्रम्
सम्पूर्णम्

தமிழ்
இதி ஸ்ரீராவண க்ருதம்
சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
சம்பூர்ணம்

இத்தால் இராவணன் அருளிய சிவ தாண்டவ தோத்திரம் முற்றிற்று

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Bhavan's Journal, Volume 22, Issues 14-26, p.67
  2. New world Encyclopedia

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_தாண்டவ_தோத்திரம்&oldid=3574319" இலிருந்து மீள்விக்கப்பட்டது