உள்ளடக்கத்துக்குச் செல்

சிவ தத்துவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவ தத்துவங்கள் ஐந்து ஆகும். இவை சிவனோடு அன்பு கொள்ளும் முறைகள். சிவதத்துவம் முப்பத்தாறு தத்துவங்களின் மூன்று பிரதான பகுதிகளில் ஒன்றாகும். மற்றையவை வித்தியாதத்துவம் மற்றும் ஆன்ம தத்துவம் என்பனவாகும்.

சிவதத்துவங்கள் வருமாறு:

சுத்த வித்தை: அறிவு குறைவாக இருந்து செயல் அதிகமாக இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது. கண்ணப்ப நாயனாரது பக்தி சுத்த வித்தை.

ஈசுவரம்: அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்தால் அடக்கம் வருகின்றது.

சாதாக்கியம்: சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது.

விந்து: இது சக்தியின் வடிவம்.

நாதம்: இது சிவாநுபூதி. சிவனோடு ஒன்றுபட்டிருத்தல்.

வெளியிணைப்புகள்

[தொகு]

இனியது கேட்கின் வலைப்பதிவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_தத்துவங்கள்&oldid=3244738" இலிருந்து மீள்விக்கப்பட்டது