சிவ கார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவ கார்த்திகேயன்
பிறப்பு சிவ கார்த்திக்கேயன்
17 பெப்ரவரி 1985 (1985-02-17) (அகவை 30)[1]
சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாவின் கொடி இந்தியா
பணி நடிகர், மேடைச் சிரிப்புரையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்
வாழ்க்கைத் துணை ஆர்த்தி (2010–முதல்)

சிவ கார்த்திகேயன் (ஆங்கிலம்:Sivakarthikeyan) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். திருச்சி ஜெஜெ இஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றவர். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.[2][3] இவர் விளம்பர நிறுவனத்திற்காக மூன்று நாட்கள் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளார். [4]

திரைப்பட விபரம்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 மெரினா செந்தில் நாதன்
2012 3 குமரன்
2012 மனம் கொத்திப் பறவை கண்ணன்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா பட்டை முருகன்
2013 எதிர்நீச்சல் குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ்
2013 வருத்தபடாத வாலிபர் சங்கம் போஸ் பாண்டி
2014 மான் கராத்தே பீட்டர்
2015 காக்கி சட்டை மதிமாறன்
2015 ரஜினி முருகன் ரஜினி முருகன்

பாடிய பாடல்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் டி. இமான்
2014 மான் கராத்தே ராயபுரம் பீட்டர் அனிருத் ரவிச்சந்திரன்
2014 காக்கி சட்டை ஐயம் சோ கூல் அனிருத் ரவிச்சந்திரன்
2015 ரஜினி முருகன் ரஜினி முருகன் டி. இமான்
2015 மாப்பிள்ள சிங்கம் எதுக்கு மச்சான் என். ஆர். ரகுநந்தன்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_கார்த்திகேயன்&oldid=1899808" இருந்து மீள்விக்கப்பட்டது