சிவா கேசவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவா கேசவன்
Shiva Keshavan
2017-12-01 Shiva Keshavan by Sandro Halank–02.jpg
Keshavan in 2017
தனிநபர் தகவல்
பிறப்பு25 ஆகத்து 1981 (1981-08-25) (அகவை 38)
இந்தியா, மணாலி, இமாச்சலப் பிரதேசம்
வலைத்தளம்website
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுலூஜ்
நிகழ்வு(கள்)ஒற்றையர்
தொழில்முறையானது1998
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)134.3km/h

சிவா கேசவன் (Shiva Keshavan (பிறப்பு 25 ஆகத்து  1981) என்பவர் ஆறுமுறை ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரரும்,குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் லூஜ் விளையாட்டில் பங்கேற்க முதல் இந்திய பிரதிநிதியும் ஆவார்.  அவர்  ஜப்பானின் நான்கானோவில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஆசியா விளையாட்டுப் போட்டியில், மணிக்கு 131.9 கிமீ (82.0 மைல்) வேகம் என்ற முந்தைய சாதனையை முறியடித்து, மணிக்கு 134.3 கிமீ  (83.5 மைல்) என்ற புதிய ஆசிய வேக சாதனையை உருவாக்கி, தங்கப் பதக்கம் வென்றார்.   2012 இல், அவர் 49.590 வினாடிகளில் ஒரு புதிய ஆசிய சாதனையை பதிவு செய்து. ஆசிய சாம்பியனாக  ஆனார்.

வாழ்க்கை[தொகு]

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது தாயார் இத்தாலியைச் சேர்ந்தவர் தந்தை கேரளத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாயும் தந்தையும் இணைந்து ஒரு சாகச விளையாட்டு நிறுவனத்தை நடத்திவந்தார்கள்.

ஒருமுறை லூஜ் விளையாட்டைப் பற்றி விழிப்புணர்வை ஊட்ட ஏற்படுத்த சனாவரில் அவர் படித்த பள்ளியில் சர்வதேச லூஜ் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். சாகச விளையாட்டுகளால் ஈர்க்கப்பட்டிருந்த சிவா கேசவனுக்கு இந்த விளையாட்டுப் பிடித்துபோனது. 1998 ஆம் ஆண்டு தன் பதினாறாம் வயதில் முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். இந்த விளையாட்டை இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் சொந்த முயற்சியாலும் ஆர்வத்தாலும் தொடர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் இதுவரை லூஜ் விளையாட்டை விளையாடுவதற்கான வசதி இல்லை. அதனால், சிவா பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் பயிற்சிபெற்றுவந்தார். அது முடியாதபோது, வேறுவழியில்லாமல் இமயமலை அடிவாரத்தின் சாலைகளில் இந்த விளையாட்டைப் பயிற்சி செய்துதான் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். ஒலிம்பிக்கில் சிவா பதக்கம் வெல்லாவிட்டாலும், ஆசிய லூஜ் சாம்பியன்ஷிப் உள்பட பல போட்டிகளில் 11 பதக்கங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக்கில் முழுநேரத் தனிப்பட்ட பயிற்சியாளர் இல்லாமல் இந்த அளவுக்கு இவர் சாதித்திருக்கிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கனி (2018 பெப்ரவரி 15). "குளிர்கால ஒலிம்பிக்: அறியப்படாத விளையாட்டு; அசத்திய இந்தியர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 16 பெப்ரவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவா_கேசவன்&oldid=2711852" இருந்து மீள்விக்கப்பட்டது