சிவாலயத் திருமேனிகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவாலயத் திருமேனிகள் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட நூலாகும்.

சிவாலயத் திருமேனிகள்
நூல் பெயர்:சிவாலயத் திருமேனிகள்
ஆசிரியர்(கள்):எஸ். நாராயணசாமி
வகை:சிற்பக்கலை
துறை:சிற்ப நுட்பங்கள்
மொழி:தமிழ்
பக்கங்கள்:552
பதிப்பகர்:திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை
பதிப்பு:முதல் பதிப்பு
1999
ஆக்க அனுமதி:திருவாவடுதுறை ஆதீனம்

தலைப்புகள்[தொகு]

சிவன் கோயில்களின் அமைப்பு, பிற மூர்த்திகள், திருச்சுற்றிலும் கோபுரங்களிலும் உள்ள திருமேனிகள், சிற்ப சாத்திரங்களில் காணப்படும் சிற்ப அமைதிகள், திருமேனியின் கரங்களில் காணப்படும் ஆயுதங்கள் என்ற நிலைகளில் ஆராயப்படுகின்றன. லிங்கோத்பவர், இடபதேவர், துவாரபாலகர், தேவி, கணபதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், துர்க்கை, நடராஜர், சோமாஸ்கந்தர், இலட்சுமி, சரசுவதி, ஜேஷ்டாதேவி, சண்டேசுவரர் உள்ளிட்ட சிற்பங்களின் அமைப்புப் பற்றி விவாதிக்கப்படுகின்றன.

அமைப்பு[தொகு]

சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகளால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட, திருக்கயிலாயப் பரம்பரை குருமரபில் வருகின்ற திருவாவடுதுறை ஆதீனத்தால் [1] வெளியிடப்பட்ட இந்நூல் 81 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

படங்கள்[தொகு]

ஒவ்வொரு சிற்பத்தின் அமைப்பினை எளிதாகக் காணும் வகையில் பல வரைபடங்களும், புகைப்படங்களும் தரப்பட்டுள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. குமுதம் ஜோதிடம்; 10.05.2013; திருமூலர் திருமந்திரம் தந்தருளிய திருவாவடுதுறை திருத்தலம்

மேலும் பார்க்க[தொகு]