உள்ளடக்கத்துக்குச் செல்

சிவாஜி சாவந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவாஜி சாவந்த்
1981-இல் சாவந்த்
பிறப்பு(1940-08-31)31 ஆகத்து 1940
அஜாரா, கோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரம், இந்தியா
இறப்பு18 செப்டம்பர் 2002(2002-09-18) (அகவை 62)
பனாஜி, கோவா, இந்தியா
மற்ற பெயர்கள்எஸ். டபிள்யூ. சாவந்த்
பணிஎழுத்தாளர், ஆசிரியர், பதிப்பாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மிருத்யுஞ்சய்
சாவா
யுகந்தர்
விருதுகள்மூர்த்திதேவி விருது

சிவாஜி சாவந்த் (Shivaji Sawant) (31 ஆகஸ்ட் 1940 – 18 செப்டம்பர் 2002) மராத்தி மொழியில் எழுதிய ஒர் இந்திய புதினா ஆசிரியரும் நாடக ஆசிரியரும் ஆவார்.[1] புகழ்பெற்ற மிருத்யுஞ்சய் என்ற மராத்திப் புதினத்தை எழுதியதற்காக இவர் மிருத்யுஞ்சய்கார் என்று அறியப்படுகிறார்.[2] சாவா மற்றும் யுகந்தர் ஆகியவையும் இவரது பிற குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும். 1994-ஆம் ஆண்டில் பாரதிய ஞானபீடத்தால் வழங்கப்படும் ‘மூர்த்திதேவி விருது’ பெற்ற முதல் மராத்தி எழுத்தாளர் இவராவார்.[3]

மகாபாரதத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றான கர்ணனை மையமாகக் கொண்டு 'மிருத்யுஞ்சய்' என்ற நூலை இவர் எழுதினார். இந்நூல் இந்தி (1974), ஆங்கிலம் (1989), கன்னடம் (1990), குஜராத்தி (1991), மலையாளம் (1995) ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. 1980-இல் வெளியான இவரது 'சாவா' என்ற புத்தகம் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. 'சாவா' அதே பெயரில் 2025-இல் ஒரு இந்தித் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது. இலட்சுமண் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கௌஷல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் 1995 முதல் மகாராட்டிர இலக்கிய சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1983-இல் பரோடா சாகித்ய சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் ஒரு வரலாற்று நூலாசிரியராக மட்டுமல்லாமல், அரசியல் சார்ந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சாவந்த் மகாராட்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அஜாரா கிராமத்தில் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.அஜாரா வியங்கட்ராவு உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அங்கு இவர் ஒரு சடுகுடு வீரராகவும் இருந்தார்.[1][4]

தொழில் வாழ்க்கை

[தொகு]

இவர் நீதிமன்றத்தில் எழுத்தராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1962 முதல் 1974 வரை கோலாப்பூரில் உள்ள ராஜாராம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பிறகு புனேவுக்குச் சென்ற இவர், மகாராட்டிர அரசின் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட லோக்ஷிக்ஷன் என்ற மாத இதழின் இணை ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் ஆறு ஆண்டுகள் (1974–1982) பணியாற்றினார். எழுத்துப்பணியில் முழுமையாக ஈடுபடுவதற்காக, 1983-ஆம் ஆண்டில் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.[1][4] 1983-இல் பரோடாவில் நடைபெற்ற "பரோடா மராத்தி சாகித்ய சம்மேளனத்தின்" தலைவராக செயல்பட்டார். பின்னர் 1995-இல் மகாராட்டிர இலக்கிய சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று, சில ஆண்டுகள் அப்பதவியை வகித்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Marathi novelist Shivaji Sawant dead". rediff. http://www.rediff.com/news/2002/sep/18sawant.htm. பார்த்த நாள்: 19 December 2013.
  2. ↑ "PM Condoles Death Of Shri Shivaji Sawant". Press Information Bureau (PIB). 19 September 2002. Retrieved 28 February 2025.</ref<ref name="b174">"Governor condoles demise of Shivaji Sawant". The Times of India. 19 September 2002. Retrieved 28 February 2025.
  3. ↑ "MOORTIDEVI LAUREATES". Bharatiya Jnanpith. Archived from the original on 19 December 2013. Retrieved 19 December 2013. 11. Shivaji Sawant (1994), Marathi
  4. 1 2 3 "Who Was Shivaji Sawant? The Author Who Wrote Chhava: List Of Other Must-Read Books By Legendary Writer". Free Press Journal. 20 February 2025. Retrieved 28 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஜி_சாவந்த்&oldid=4610535" இலிருந்து மீள்விக்கப்பட்டது