சிவாச் சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவாச் சித்தர் இலங்கையின் மட்டக்களப்பின் தெற்கே உள்ள காரைதீவு எனும் கிராமத்தில் சமாதியடைந்த சித்தர்களுள் ஒருவராவார். எனினும் தமது பெயருக்கு ஏற்ப இவர் சித்துக்களை பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டவரல்லர். அமைதியும், சாந்தமும் தவழும் முகத்தினரான சுவாமிகள் மக்களால் சிவாச் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர். கதிர்காம பாதயாத்திரை வந்த வழியில் காரைதீவில் தங்கிக் கொண்ட சுவாமிகள் அங்கேயே தனது அருளாசியை வழங்கி சமாதியும் அடைந்தவர் ஆனார்.

இவரது சமாதி ஆலயம் காரைதீவு பொதுமயானத்தை அண்மித்ததாய் பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்து காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாச்_சித்தர்&oldid=2986079" இலிருந்து மீள்விக்கப்பட்டது