சிவப்பு வாயில் கலைக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவப்பு வாயில் கலைக்கூடம் பிரையன் வாலசு என்பவரால் நிறுவப்பட்ட பெய்ஜிங்கின் முதல் தனியார் சமகால கலைக்கூடமாகும். [1] நகரக் கோட்டைகளின் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்த சில மிங் வம்ச கோபுரங்களில் ஒன்றான தோங்பியன்மெனில் உள்ள வரலாற்று தென்கிழக்கு மூலை கோபுரத்தில் அமைந்துள்ள இந்தக் கலைக்குடம், பாரம்பரியத்துடன் இணைந்து சீனாவின் சமகால கலை வெளிப்பாட்டின் பொருட்களை முன்வைக்கிறது. இது வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும். மேலும் நுழைவுக் கட்டணம் கிடையாது.

வரலாறு[தொகு]

தென்கிழக்கு மூலை கோபுரத்திற்குள் அமைந்துள்ள சிவப்பு வாயில் கலைக்கூடம். இது தோங்க்பியன்மெனில் உள்ள மிங்-கால நகரக் கோட்டைகளின் ஐந்து நூற்றாண்டுகள் பழமையான நினைவுச்சின்னமாகும்.

1984 ஆம் ஆண்டில் சீனாவுக்குச் சென்று 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் திரும்பிய ஆத்திரேலியரான பிரையன் வாசு என்பவரால் 1991 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. சீன கலை வரலாற்றைப் படிப்பதற்காக, பெய்ஜிங்கில் உள்ள மத்திய நுண்கலை கழகத்தில் சேருவதற்கு முன்பு 1989-1990 வரை வெளிநாட்டு மொழி அச்சகத்தில் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் அவருக்கு நேர்ச்மிருந்தது. இந்த காலகட்டத்தில் அவர் ஒரு தற்கால சீன கலைக்கூடத்தை நிறுவுவது குறித்து பரிசீலிக்கத் தொடங்கினார். 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் அவர் ஜியாங்குவோமனில் உள்ள பெய்ஜிங் பண்டைய ஆய்வகத்தில் நண்பர்களுடன் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தார். [2] அக்காலத்தின் தற்கால கலைக் காட்சி வெளிநாட்டினரின் முன்முயற்சியுடன் இணைந்து அடிமட்ட முயற்சிகளைக் கொண்டிருந்தது. பிரத்தியேக பாரம்பரிய கலை நிறுவனங்களால் விலகி, இளம் கலைஞர்கள் பெய்ஜிங் வழியாக தங்கள் படைப்புகளுடன் ஆர்வமுள்ள பார்வையாளர்களைத் தேடினார்கள். அவர்கள் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் விடுதிகளில் காட்சிப்படுத்துவார்கள் அல்லது ஆர்வமுள்ளவர்களின் வீடுகளுக்கேச் சென்று காட்சிப் படுத்துவார்கள். அங்கு அவர்களின் வேலை கிடைக்கக்கூடிய எல்லா இடங்களையும் எடுத்துக் கொண்டது. [3] தனது படிப்பை முடித்த பின்னர், வாலஸ் ஐந்து நூற்றாண்டுகள் பழமையான மிங்-கால தென்கிழக்கு மூலை கோபுரத்தில் தோங்பியன்மெனில் சிவப்பு வாயில் கலைக்கூடத்தை நிறுவினார். இது இப்போது தோங்செங் மாவட்டத்தின் மிங் நகர கோட்டை இடிபாடுகள் பூங்காவில் உள்ளது. 1991 சூலையின் தொடக்க கண்காட்சியில் ஜாங் யாஜி, தாகோங், வாங் இலிஃபெங் மற்றும் வாங் லுயான் ஆகியோரின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

சமீபத்திய அம்சங்கள்[தொகு]

இந்தக் கலைக்கூடத்தின் திபெத்திய கலைஞர்களுடனான ஒத்துழைப்பு 2008 ஆம் ஆண்டில் "லாசாவுக்குத் திரும்பு" நிகழ்ச்சியைத் தயாரித்தது, இதில் கோங்கர் கியாட்சோ போன்ற கலைஞர்கள் பங்கேற்றனர். [4] 2008 ஆம் ஆண்சு திசம்பரில், ஷெப்பர்ட்ஸ் ஃபீல்ட் வில்லேஜ் குழந்தைகள் அனாதை இல்லத்திற்கான நிதி திரட்டுவதற்காக கலை கண்காட்சியை நடத்தியது. [5] 2011 ஆம் ஆண்டில், தனது 20 வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. [6]

சிவப்பு வாயில் உறைவிடம்[தொகு]

கலைக்கூடத்தின் நிறுவனர் பிரையன் வாலஸின் சமகால சீனக் கலை குறித்த உள்நோக்கு படிப்படியாக அவரை பெய்ஜிங் கலைக் காட்சிக்கு அறிமுகம் தேடும் சர்வதேச கலைஞர்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற தொடர்பு நபராக மாற வழிவகுத்தது. 2001 ஆம் ஆண்டில், பிரையன் வருகை தரும் கலைஞர்களுக்கு ஒரு அரங்க வசதியை வாடகைக்கு எடுக்கத் தொடங்கினார். தேவைக்கு ஏற்றவாறு குடியிருப்புகள் விரிவடைந்தது. இன்று, கலைக்கூடம் பத்து முழுமையான குடியிருப்புகளை நிர்வகிக்கிறது. அவர்கள் தற்போது ஆண்டுக்கு 70 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர்.

இந்த திட்டம் கலைக்கூடத்தின் உதவியுடன் இலாப நோக்கற்ற அடிப்படையில் இயங்குகிறது. பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த போக்குவரத்து, வழங்கல் மற்றும் தங்குமிட செலவுகளை ஈடுகட்ட எதிர்பார்க்கப்படுகிறார்கள். பலர் தங்கள் சொந்த நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுகிறார்கள். கலைக்கூடம் நிதியுதவியை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் உறவுகளை வளர்க்கிறது. ஆஸ்திரிய தூதரகம் தற்போது இந்தத் திட்டத்துடன் ஒத்துழைத்து, போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களை ஆண்டு முழுவதும் அனுப்புகிறது. [7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Red Gate Gallery Beijing". Asiarooms.com (2011-02-21).
  2. "Brian Wallace's Red Gate Gallery". மூல முகவரியிலிருந்து 2012-07-22 அன்று பரணிடப்பட்டது.
  3. "Chinese Artists at a Crossroads". Artnet.de.
  4. "Gonkar Gyatso". Tibetartmovement.com. மூல முகவரியிலிருந்து 2012-09-17 அன்று பரணிடப்பட்டது.
  5. Clothing (2008-12-17). "25 Ways to Make Beijing Your Home for the Holidays | Beijingkids Magazine | Playing Inside | Dec 17, 2008". beijing-kids.com.
  6. "Red Gate Gallery - Beijing - Events Art | City Weekend Guide". Cityweekend.com.cn.
  7. "History". Red Gate Gallery. மூல முகவரியிலிருந்து 2012-03-12 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]