சிவப்பு பூசணி வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவப்பு பூசணி வண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: வண்டு
குடும்பம்: Chrysomelidae
பேரினம்: Raphidopalpa
இனம்: R. foveicollis
இருசொற் பெயரீடு
Raphidopalpa foveicollis
Lucas, 1849
வேறு பெயர்கள்

Aulacophora foveicollis (Lucas, 1849)

சிவப்புப் பூசணி வண்டு (Raphidopalpa foveicollis, the red pumpkin beetle) என்பது கிறிஸ்மொலிடிடில் குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகளின் ஒரு வகை ஆகும். இது ஒரு தீங்குயிர் ஆகும். இவை பெரும்பாலும் பூசணிக் கொடியில் காணப்படக்கூடியன.[1]

விளக்கம்[தொகு]

இவற்றில் வயதுக்கு வந்த வண்டுகள் 5 முதல் 8 mm (0.20 முதல் 0.31 in) நீளமாகவும்,  3.5 mm (0.14 in) தடிமனாகவும் இருக்கும். இந்த வண்டுகளின் நிறமானது இளஞ்சிவப்பு நிறத்தின் வெளிர் ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் இருந்து ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் நடுத்தர பழுப்பு நிறம்வரை மாறுபடும். மேலும்   இவற்றின் வயிற்றுப் பகுதியில் கருப்பு மற்றும் மென்மையான வெள்ளை முடிகள் காணப்படும். இவற்றின் இளம்பூச்சிகள் பிறந்தவுடன் அழுக்கு வெள்ளை நிறத்திலும் சற்று வளர்ந்த பிறகு பாலாடை போன்ற மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

பரவல்[தொகு]

இவை தெற்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.   இது வடமேற்கு இந்தியாவில் பயிர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சியாக உள்ளன.[2]

வாழ்க்கை முறை[தொகு]

இவை பரங்கி, பூசணி, தர்பூசணிக் கொடிகளில் காணப்படும். இவை இந்த தாவரங்களின் இலைக்கு அடியில் பொதுவாகக் காணப்படும். இவற்றின் இளம்பூச்சிகள் வேர், தண்டு, கனிகளை சேதப்படுத்தக்கூடியன. வளர்ந்த வண்டுகள் பூக்களையும் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன. வயல்களில் அறுவடைக்குப் பிறகு இந்தப் பூச்சிகள் மண்ணுக்குள் நெடுந்தூக்கம் கொள்ளும் என்று கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pumpkin beetle". Pests of Cucurbits. IndiaAgroNet.com. பார்த்த நாள் 13 May 2016.
  2. Economic Zoology. Rastogi Publications. 2007. பக். 117–120. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7133-876-4. https://books.google.com/books?id=MJZvYNrXiGwC&pg=PA117. 
  3. ஆதி வள்ளியப்பன் (2018 மார்ச் 24). "பூசணியைத் தாண்டிப் பெருகிய வண்டுகள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 1 ஏப்ரல் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_பூசணி_வண்டு&oldid=2963439" இருந்து மீள்விக்கப்பட்டது