உள்ளடக்கத்துக்குச் செல்

சிவப்பு நீர்த்தச் சாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A bride's hand on her Gaye Holud, Bangladesh
ஒரு மணப்பெண்ணின் மஞ்சள் குங்கும விழா சடங்கின்போது, ​​சிவப்பு நீர்த்தச் சாயம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது கை

சிவப்பு நீர்த்தச் சாயம் (Alta (dye))என்பது இந்தியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் [1][2][3][4][5][6][7] ஒரு கலாச்சார நடைமுறையாகப் பெண்களின் கைகளையும் கால்களையும் அலங்கரிக்கப் பயன்படும் ஒரு சிவப்பு நீர்த்தச் சாயமாகும்.இது அல்டா,ஆல்தா இலட்சிய இரசா, அலக், பரணி, வசந்தம் அல்லது மகாவர் என்றும் பலவாறு அழைக்கப்படுகிறது. இது வழக்கமாகத் திருமண விழாக்களிலும் பண்டிகைகளின் போதும், ஒரு பஞ்சுத் துண்டு அல்லது தூரிகையின் உதவியுடன் பூசப்படுகிறது.

இயற்கையான சிவப்பு நீர்த்தச் சாயம், சிவப்பு அரக்கு எனப்படும் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.இது 'கெர்ரியா லக்கா' என்ற பூச்சிகளிலிருந்து பெறப்படும் இயற்கையான பிசின். இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இதற்குப் பதிலாகப் பெரும்பாலும் செயற்கைச் சாயங்களே பயன்படுத்தப்படுகின்றன.[8]

ஆரம்பகால வரலாறு

[தொகு]

உபநிடதங்களில் சிவப்பு நீர்த்தச் சாயத்தைப் பற்றிய ஆரம்பகாலக் குறிப்பு காணப்படுகிறது. அங்கு அது, அரக்குப் பிசினிலிருந்து பெறப்பட்ட சிவப்பு அரக்கு சாய நிறமியான இலட்சிய இரசம் என்று அழைக்கப்படுகிறது. இது சோலா-சிருங்காரம் எனப்படும் பெண்களின் பதினாறு ஆபரணங்களில் ஒன்றாகும்.[9][10]

கலாச்சார முக்கியத்துவம்

[தொகு]
புதுமணப்பெண்ணை அவளது புதிய இல்லத்திற்கு வரவேற்கும் சடங்கு — இதில், அவளது பாதங்கள் பால் மற்றும் 'சிவப்பு நீர்த்தச் சாயக்' கலவையில் தோய்க்கப்படுகின்றன.

புதிதாகத் திருமணம் செய்துகொண்ட மணமகளை அவளது புதிய வீட்டிற்கு வரவேற்கும் ஒரு சடங்கு. இதில் பாதங்கள் பால் மற்றும் சிவப்பு நீர்த்தச் சாயக் கலவையில் தோய்க்கப்படுகின்றன. வங்காள, பீகாரி மற்றும் ஒடியா கலாச்சாரங்களில் சிவப்பு நீர்த்தச் சாயம் பெரும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.[3][11][12] மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், பெண்கள் பாரம்பரியமாகத் திருமணத்திற்காகவும்[7][13] மற்றும் பகேலா பைசாக் , பகேலா பால்கன் போன்ற கலாச்சார விழாக்களுக்காகவும்[14][15][16] தங்கள் கைகளையும் கால்களையும் சிவப்பு நீர்த்தச் சாயத்தால் அலங்கரிக்கின்றனர். துர்கா பூஜையின் போது சிவப்பு சாயம் அணிவது ஒடியா மற்றும் வங்காளப் பெண்களுக்கு ஒரு பொதுவான சடங்காகும்.[17]

தன் கைகளிலும் கால்களிலும் ஆல்டா அணிந்திருக்கும் ஒடிசி பாரம்பரிய நடனக் கலைஞர்

ஒடிசி பாரம்பரிய நடனக் கலைஞர்கள் நடனமாடும்போது தங்கள் கைகளிலும் கால்களிலும் சிவப்பு நீர்த்தச் சாயத்தை அணிந்திருப்பதைப் பொதுவாகக் காணலாம். பெண்மையை (மாதவிடாய்) கொண்டாடும் மூன்று நாள் விழாவான இராச பர்பா-மிதுன சங்கராந்தி சமயத்தில், இது பெண்களின் பாதங்களில் ஒரு மங்களகரமான சின்னமாகப் பூசப்படுகிறது.[18]

இது தென்னிந்தியாவில் பரணி என்று அழைக்கப்படுகிறது. மேலும் மிகவும் நீர்த்த வடிவில் பரணி வசந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் வசந்தம். இது பண்டிகை காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளாலும், பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் மோகினியாட்டம் நடனக் கலைஞர்களாலும் அணியப்படுகிறது.[19]

பீகாரில் அசாமத் விழாவின் போது சிவப்பு நீர்த்தச் சாயம் பூசப்படுகிறது.

நேபாளத்தில் இது அலாக் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது திருமணங்கள், மத சடங்குகள் மற்றும் பண்டிகைகளின் ஒரு முக்கிய பகுதியாகும்.[20]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. (in bn)Kaler Kantho. 6 November 2019. https://www.kalerkantho.com/print-edition/education/2019/11/07/836116.
  2. আলতা রাঙা পা. Daily Bangladesh (in Bengali). Retrieved 17 October 2020.
  3. 1 2 প্রামাণিক, কল্লোল. "পায়ে আলতা পরিয়ে শুভলগ্ন রাঙিয়ে তোলেন তিনি". anandabazar.com (in Bengali). Retrieved 16 October 2020.
  4. "Bengali Hindu Wedding - Rituals, Customs, Dress, Food". www.culturalindia.net (in ஆங்கிலம்). Archived from the original on 10 மே 2021. Retrieved 17 October 2020.
  5. "Newari girls participate in mass Bel Bibaha [with photos]". kathmandupost.com (in ஆங்கிலம்). Retrieved 17 October 2020.
  6. Shrestha, Shreeya (November 2017). "An Elaborate Ritual called Marriage". ECS NEPAL (in ஆங்கிலம்). Retrieved 17 October 2020.
  7. 1 2 "Learn How Bengali Mehndi Blends Simplicity, Authenticity and Ethnicity on the Wedding Day". www.weddingwire.in (in Indian English). Retrieved 16 October 2020.
  8. Rath, Bikash (2 September 2014). "A sacred dye to return" (in en). Down To Earth. https://www.downtoearth.org.in/environment/a-sacred-dye-to-return-46133. "Originally prepared from lac and hence known as lakshya rasa in Sanskrit, this dye has long been replaced by synthetic products in the market that most users were unaware of."
  9. "Alta : The Red Indian Dye and its Significance". Enroute Indian History. 18 September 2023.
  10. Assomull, Sujata (16 January 2023). ""dhon" makes a case for the traditional alta in the brand's latest campaign". Vogue India (in Indian English).
  11. (in bn)Kaler Kantho. 6 November 2019. https://www.kalerkantho.com/print-edition/education/2019/11/07/836116.
  12. আলতা রাঙা পা. Daily Bangladesh (in Bengali). Retrieved 15 October 2020.
  13. "দাও গায়ে হলুদ, পায়ে আলতা". e-barta247.com (in Bengali). Archived from the original on 31 March 2022. Retrieved 27 September 2025.
  14. (in bn)The Daily Ittefaq. https://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDRfMDhfMTRfNF8xNF8xXzEyMTUyNA==.
  15. "আলতা পরা পায়ে". m.newsg24.com (in Bengali). Archived from the original on 26 July 2021. Retrieved 30 December 2020.
  16. "বৈশাখী উন্মাদনার ঢেউ শাবিতে". banglanews24.com (in Bengali). Archived from the original on 17 October 2020. Retrieved 30 December 2020.
  17. "Alta Dye: Bright Red Liquid Color Used to Adorn Palms and Feet". Utsavpedia (in அமெரிக்க ஆங்கிலம்). 17 November 2016. Retrieved 25 May 2021.
  18. "Odisha Tourism : Raja, A Festival Of Fun, Frolic and Mouthwatering Delicacies". odishatourism.gov.in (in ஆங்கிலம்). Retrieved 25 May 2021.
  19. "Altha : Also Known As Parani For Legs A Cherished & Cheerful Telugu Tradition". 8 April 2024.
  20. "The Allure of Alta: A Symbol of Prosperity, Reimagined As A Fashion Accessory". HerZindagi English (in ஆங்கிலம்). 29 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_நீர்த்தச்_சாயம்&oldid=4586551" இலிருந்து மீள்விக்கப்பட்டது