சிவப்பு நட்சத்திர மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு நட்சத்திர மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முட்தோலிகள்
வகுப்பு: அசுடிராய்டியே
வரிசை: வால்வாடிடா
குடும்பம்: கோனியாசுடிரிடே
பேரினம்: புரோமியா
இனம்: பு. மில்லிபோரெல்லா
இருசொற் பெயரீடு
புரோமியா மில்லிபோரெல்லா
(இலமார்க், 1816)
வேறு பெயர்கள் [1]
  • அசொடெரியசு மில்லிபோரெல்லா இலமார்க், 1816
  • புரோமியா பிசுடோரியா முல்லர் & டுரீச்சல், 1842
  • லிங்கிய மில்லிபோரெல்லா முல்லர் & டுரீச்சல், 1842
  • லிங்கிய பிசுடோரியா முல்லர் & டுரீச்சல், 1842
  • சைடேசுடெர் மில்லிபோரெல்லசு மைசெலின், 1845
  • சைடேசுடெர் பிசுடோரியசு முல்லர் & டுரீச்சல், 1842

சிவப்பு நட்சத்திர மீன் (red starfish) அல்லது கரும்புள்ளி நட்சத்திர மீன் (புரோமியா மில்லிபோரெல்லா) என்பது கோனியாசெடிரிடே குடும்பத்தை சார்ந்த நட்சத்திர மீனாகும். இது முட்தோலி வகையினைச் சார்ந்தது.

விளக்கம்[தொகு]

சிவப்பு நட்சத்திர மீன் 15 செமீ விட்டமுடைய உயிரியாக வளரும் தன்மை உடையது. இவை சிவப்பு வண்ணத்தின் பல மாறுபாடுகளில் காணப்படலாம்.[2]

பரவல்[தொகு]

இந்த வகைகளை மீன்களை  இந்தோ-மேற்கு பசிபிக், தெற்கு மடகாசுகர், இலங்கை, வங்காள விரிகுடா, கிழக்கு தீவுகள், வட ஆத்திரேலியா, பிலிப்பீன்சு, சீனா, தென் ஜப்பான் மற்றும் தென் பசிபிக் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.[1]

வாழ்விடம்[தொகு]

இது கடலுக்கடியில் 0-73 மீட்டர் ஆழத்தில் வாழ்கிறது.[3]

ஊட்டச்சத்து மற்றும் மேலாண்மை[தொகு]

பாறைகள் அதிகமாக இருக்கும் இடங்களில்  இத்தகைய மீன்கள் காணப்படுகின்றன. பாறையின் மெல்லிய அடுக்குகளில்  காணப்படும் பாசிகளை உண்டு வாழ்கிறது. தண்ணீரில் ஏற்படும் திடீர் வேதிமாற்றங்களை இது தாக்குப்பிடிக்காது.[4][2] 

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The World Asteroidea Database - Fromia milleporella (Lamarck, 1816)". Marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
  2. 2.0 2.1 "Red Sea Star". Liveaquaria.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
  3. "Fromia milleporella". Sealifebase.fisheries.ubc.ca. 2012-07-19. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
  4. "Red Fromia Starfish, Red Starfish - Fromia milleporella". Bluezooaquatics.com. 2008-05-30. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_நட்சத்திர_மீன்&oldid=3554296" இலிருந்து மீள்விக்கப்பட்டது