சிவப்பு அறைக் கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவப்பு அறைக் கனவு
紅樓夢
JiaXu01.jpg
சிவப்பு அறைக் கனவு சியாக்சு பதிப்பின் ஒரு பக்கம்
நூலாசிரியர் சாவோ சுவேச்சின்
உண்மையான தலைப்பு 石頭記
நாடு சீனா
மொழி சீனம்
வகை புதினம்
வெளியிடப்பட்ட திகதி
18ம் நூற்றாண்டு
ஆங்கில வெளியீடு
1973–1980 (முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு)
ஊடக வகை Scribal copies/Print
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

சிவப்பு அறைக் கனவு (எளிய சீனம்: 红楼梦மரபுவழிச் சீனம்: 紅樓夢பின்யின்: Hónglóu mèng) என்பது சீன நாட்டார் இலக்கியத்தில் ஒரு தலை சிறந்த படைப்பும், சீனாவின் பெரும் செந்நெறிப் புதினங்கள் நான்கில் ஒன்றும் ஆகும். 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் சிங் வம்சக் காலத்தில் வாழ்ந்த சாவோ சுவேச்சின் என்பவர் எழுதியதாகக் கருதப்படும் இந்தப் புதினம் தொடக்கத்தில் கல்லின் கதை (எளிய சீனம்: 石头记மரபுவழிச் சீனம்: 石頭記பின்யின்: Shítóu jì; நேர்பொருளாக "கல்லின் பதிவு"), என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இப் புதினம் தொடர்பான ஆய்வுத்துறையை சிவப்பியல் என்கின்றனர். இது சீனச் செந்நெறிப் புதினங்களில் தலையாயது எனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இப் புதினம் காவோவின் குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்பாரா நன்மைகளை விளக்கும், ஓரளவு தன்வரலாற்றுத் தன்மை கொண்ட ஒரு புதினம் எனலாம். இப் புதினம், படைப்பாளியின் இளமைக் காலத்தில் அவர் அறிந்த ஒரு பெண்ணின் நினைவாக எழுதப்பட்டது. இப் படைப்பின் ஆக்குனர் அதன் முதல் அத்தியாயத்தில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இப்புதினம், அதன் பெருமளவு பாத்திரங்களுக்காகவும், அதன் உளவியல் நோக்குக்காகவும் மட்டுமன்றி, 18 ஆம் நூற்றாண்டின் சீன உயர்குடியினரின் வாழ்க்கை, சமூக அமைப்பு என்பன தொடர்பான துல்லியமானதும் நுணுக்கமானதுமான கவனிப்புகளுக்காகவும் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. அத்துடன், இது உலகின் முதற் பெண்ணியப் புதினங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.

இப் புதினம் படைப்பாளரின் பெயர் இன்றியே வெளியிடப்பட்டது. ஆனால், தொடக்க காலத்தின், சிவப்பு மையால் எழுதப்பட்ட குறிப்புக்களுடன் கூடிய கையெழுத்துப் பிரதிகளின் துணை கொண்டு, இதன் படைப்பாளி சாவோ சுவேச்சின் என 20 நூற்றாண்டின் சிவப்பியலாளர்கள் இனங்கண்டுள்ளனர்.

மொழி[தொகு]

இப் புதினம் செந்நெறிச் சீன மொழியில் அன்றி நாட்டார் சீன மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. இதன் படைப்பாளி சீனக் கவிதை, செந்நெறிச் சீன மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவராக இருந்தபோதிலும், புதினத்தின் உரையாடல் பகுதிகள் பெய்சிங் மண்டரின் வட்டார வழக்கில் உள்ளது. இதுவே பின்னர் தற்காலச் சீனப் பேச்சு மொழிக்கு அடிப்படையாக அமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_அறைக்_கனவு&oldid=1780341" இருந்து மீள்விக்கப்பட்டது