சிவப்பணுச்சிதைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பணுச்சிதைவு
Hemolysis
ஒத்தசொற்கள்Haemolysis, hematolysis, erythrolysis, or erythrocytolysis
சிறப்புநோயியல்
சிக்கல்கள்சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரக நோய்
காரணங்கள்சவ்வூடு பரவல்

சிவப்பணுச்சிதைவு (hemolysis அல்லது haemolysis) என்பது செங்குருதியணுக்களின் இயல்பான ஆயுட்காலம் 120 நாட்கள் முடிவதற்கு முன்னரேயே அவை சிதைவு அடைந்து[1] அவற்றின் உள்ளடக்கங்கள் (உயிரணுக்கணிகம்) நீர்மத்தில் (பொதுவாக, குருதி நீர்மம்) கலப்பது ஆகும். அகவுயிர் செயல் முறையிலும் புறவுயிர் ஆய்வு முறையிலும் சிவப்பணுச்சிதைவு நிகழலாம்.[2]

சில நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் சிவப்பணுச்சிதைப்பான்கள் எனப்படும் நச்சுகள் சிவப்பணுச்சிதைவின் ஒரு காரணம் ஆகும். மற்றொரு காரணம் தீவிர உடற்பயிற்சி.[3] சிவப்பணுச்சிதைப்பான்கள் இரத்த சிவப்பணுக்களின் உயிரணு மென்சவ்வைச் சேதப்படுத்துகின்றன, இதன்காரணமாக சிதைவும் இறுதியில் உயிரணு இறப்பும் ஏற்படுகின்றது.[4]

காரணிகள்[தொகு]

சில ஒட்டுண்ணிகள் ( எ.கா., பிளாஸ்மோடியம் ), சில தன்னுடல் தாக்குநோய்கள் ( எ.கா., தன்னுடல் தாக்கு சிவப்பணுச்சிதைவுக் குருதிச்சோகை, மருந்து தூண்டப்பட்ட சிவப்பணுச்சிதைவுக் குருதிச்சோகை) [5] சில மரபணு நோய்கள்( எ.கா., அரிவாள்-செல் நோய் அல்லது G6PD குறைபாடு ), அல்லது மிகக் குறைந்த கரை செறிவு கொண்ட குருதி [6] என்பன சிவப்பணுச்சிதைவுக்கான காரணிகள்.

வகைகள்[தொகு]

சிவப்பணுச்சிதைவில் இரண்டு வகைகள் உள்ளன. சிதைவு எங்கு நடைபெறுகிறது என்பதைப்பொறுத்து அகக் குருதிக்கலன், புறக் குருதிக்கலன் சிவப்பணுச் சிதைவு என வகைப்படுத்தப்படுகின்றன.

அகக் குருதிக்கலன் சிவப்பணுச் சிதைவு[தொகு]

குருதிக் குழாய்களுக்குள் நிகழும் சிவப்பணு அழிவை உள்ளடக்கியது.[7] இதன் போது, சிவப்பணுக்களின் உள்ளடக்கங்கள் குருதிச் சுற்றோட்டத்துள் வெளியிடப்படுகின்றன, இதனால் சுயமாகத் திரியும் குருதிப்பாய ஈமோகுளோபின்களது எண்ணிக்கை அதிகரிக்கின்றது. [8] இத்தகைய சுயமான ஈமோகுளோபின்கள் சிதைவுக்கு உள்ளாகும்போது அவை ஈம் மற்றும் குளோபின்களாக பிரிக்கப்படுகின்றன. ஈமோகுளோபின்கள் மிகையாக சிறுநீருடன் வெளியேறும் நிலையான சிறுநீரீமோகுளோபின் (ஈமோகுளோபினூரியா) ஏற்படும்.

புறக் குருதிக்கலன் சிவப்பணுச் சிதைவு[தொகு]

குருதிக் குழாய்களுக்கு வெளியே கல்லீரல், மண்ணீரல், எலும்பு மச்சை, நிணநீர் கணுக்கள் முதலிய பகுதிகளில் நிகழும் சிவப்பணு அழிவை உள்ளடக்கியது. இது மண்ணீரல் வீக்கத்தை ஏற்படுத்தலாம். புறக் குருதிக்கலன் சிவப்பணுச் சிதைவு மிகையானதாக இருந்தால், ஈமோசிடெரின் எனப்படும் இரும்பு சேமிப்பு நிறப்பொருள் மண்ணீரல், எலும்பு மஜ்ஜை, சிறுநீரகம், கல்லீரல் முதலிய பிற உறுப்புகளில் வீழ்படிவாகலாம். இதன் விளைவாக ஈமோசிடெரிமை ஏற்படுகிறது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ian, Wilkinson (2017). Oxford Handbook of Clinical Medicine (10th ). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-968990-3. https://archive.org/details/oxfordhandbookof0000unse_d4h8. 
  2. Wells, John C. (2008). Longman Pronunciation Dictionary (3rd ). Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4058-8118-0. 
  3. Witek, K; Ścisłowska, J; Turowski, D; Lerczak, K; Lewandowska-Pachecka, S; Pokrywka, A (March 2017). "Total bilirubin in athletes, determination of reference range". Biology of Sport 34 (1): 45–48. doi:10.5114/biolsport.2017.63732. பன்னாட்டுத் தர தொடர் எண்:0860-021X. பப்மெட்:28416897. 
  4. Madigan, Michael T. (2010). Brock Biology of Microorganisms 13th Edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-321-64963-8. 
  5. Barcellini, Wilma (2015). "Immune Hemolysis: Diagnosis and Treatment Recommendations". Seminars in Hematology 52 (4): 304–312. doi:10.1053/j.seminhematol.2015.05.001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1532-8686. பப்மெட்:26404442. 
  6. Beris, Photis; Picard, Véronique (2015). "Non-immune Hemolysis: Diagnostic Considerations". Seminars in Hematology 52 (4): 287–303. doi:10.1053/j.seminhematol.2015.07.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:1532-8686. பப்மெட்:26404441. 
  7. Stanley L Schrier. William C Mentzer; Jennifer S Tirnauer (eds.). "Diagnosis of hemolytic anemia in the adult". UpToDate. Archived from the original on 2017-12-26. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
  8. "Intravascular hemolysis". eClinpath. பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.
  9. Muller, Andre; Jacobsen, Helene; Healy, Edel; McMickan, Sinead; Istace, Fréderique; Blaude, Marie-Noëlle; Howden, Peter; Fleig, Helmut et al. (2006). "Hazard classification of chemicals inducing haemolytic anaemia: An EU regulatory perspective". Regulatory Toxicology and Pharmacology (Elsevier BV) 45 (3): 229–241. doi:10.1016/j.yrtph.2006.04.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0273-2300. பப்மெட்:16793184. https://rivm.openrepository.com/bitstream/handle/10029/5596/muller.pdf?sequence=1&isAllowed=y. பார்த்த நாள்: 2019-05-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பணுச்சிதைவு&oldid=3661691" இலிருந்து மீள்விக்கப்பட்டது