சிவந்த மலர்
தோற்றம்
| சிவந்த மலர் | |
|---|---|
| இயக்கம் | சசி மோகன் |
| தயாரிப்பு | கே. ஆர். கங்காதரன் |
| கதை | செல்வா |
| இசை | மரகதமணி |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | வி. இரமேஷ் பாபு |
| படத்தொகுப்பு | எம். வி. நடராஜன் |
| கலையகம் | கே. ஆர். ஜி. இண்டர்நேசனல் |
| வெளியீடு | 6 மார்ச் 1992 |
| ஓட்டம் | 93 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிவந்த மலர் (Sivantha Malar) 1992-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடியான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை சசிமோகன் இயக்கினார். செல்வாவின் எழுத்திலும், கே. ஆர். கங்காதரன் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார், கௌதமி, விஜயகுமார், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1992 மார்ச்சு 6 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர், நடிகையர்
[தொகு]- சரத்குமார் - ஆய்வாளர் விஜய்
- கௌதமி - பிரபா
- விஜயகுமார்
- ஸ்ரீவித்யா
- கவுண்டமணி - மாறன்
- செந்தில்
- டெல்லி கணேஷ் - அமைச்சர் சிவலிங்கம்
- தலைவாசல் விஜய்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருந்தார்.[1] பாடல் வரிகளைக் கவிஞர் புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.
- "எதுவரை போகும் ஆகாயம்" – எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
- "ஒரு நிமிசம் அது போதுமே" – கே. எஸ். சித்ரா
- "எரியுதே இதென்ன நிலவு நிலவு." – எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
- "ஒரு பாட்டு வந்துச்சா சுதி" – எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Old Hit Jukebox Sivandamalar Movie | Sarath Kumar, Gautami | Maragadamani | Pulavar P. T-Series Tamil. 6 June 2020. Archived from the original on 15 November 2023. Retrieved 19 June 2020 – via யூடியூப்.