சிவத்தையாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவத்தையாபுரம் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் தேர்வுநிலைப் பேருராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும். இந்த ஊர் தூத்துக்குடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி வானூர்தி நிலையத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு ஊராகும். சுமார் 5000 க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இவ்வூர் வாழ்கின்ற மக்கள் இந்து மற்றும் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர்..

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

இந்து சமயக் கோயில்கள்[தொகு]

 • அருள்தரும் ஆனந்த விநாயகர் திருக்கோவில்
 • அருள்தரும் வித்யா கணபதி திருக்கோவில்
 • அருள்தரும் முத்துமாலை அம்மன் திருக்கோவில்
 • அருள்தரும் நாராயண சுவாமி திருக்கோவில்

இக்கோவில்கள் யாவும் சிவத்தையாபுரம் அய்யாவழி அன்புக்கொடி மக்களுக்கு பாத்தியப்பட்டது.[சான்று தேவை]

 • அருள்மிகு வடபத்திரகாளி அம்மன் திருக்கோவில்
 • அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்
 • அருள்மிகு கிழக்குசாமி திருக்கோயவில்

கிறித்தவ சமயக் கோயில்கள்[தொகு]

 • தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயம்(தென்னிந்திய திருச்சபை)
 • புனித சுவாமிநாதர் ஆலயம் (ரோமன் கத்தோலிக்கப் பிரிவு)

பள்ளிகள்[தொகு]

 • அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து துவக்கப்பள்ளி
 • டி.டி.டி.ஏ (T.D.T.A.) நடுநிலைப்பள்ளி
 • ஆர்.சி நடுநிலைப்பள்ளி
 • பாரத் ஆங்கிலப்பள்ளி
 • நேசனல் ஆங்கிலப்பள்ளி
 • அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து ஆங்கிலப்பள்ளி
 • அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி

மருத்துவமனைகள்[தொகு]

 • அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
 • அரசு கால்நடை மருத்துவமனை

வங்கிகள்[தொகு]

 • தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி
 • கிராமக் கூட்டுறவு வங்கி
 • பாண்டியன் கிராம வங்கி

நூலகம்[தொகு]

 • அரசுப் பொது நூலகம்

திருவிழாக்கள்[தொகு]

இந்து சமயம்[தொகு]

 • ஆடி மாதம் கடைசி செவ்வாய் அன்று நடைபெறும் முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா. (இத்திருவிழா சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று)
 • பங்குனி மாதம் கடைசி வெள்ளி அன்று நாராயண சுவாமி கோவில் கொடைவிழா
 • தை மாதம் அனைத்து கோவில்களின் வருஷாபிஷேக விழா

10 நாட்கள் தசராத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, தமிழ் வருடப் பிறப்பு, மகா சிவராத்திரி, கார்த்திகை தீபத் திருவிழா, திருவிளக்கு பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

கிறித்தவ சமயம்[தொகு]

 • தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயப் பிரதிஷ்டை மற்றும் அசனப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை அடுத்து வரும் புதன்கிழமை கொண்டாடப்படும்.
 • புனித சுவாமிநாதர் ஆலயப் பிரதிஷ்டை

கிறித்துமசு பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு, ஈஸ்டர், மற்றும் புனித வெள்ளி ஆகிய விழாக்களும் மத பேதமின்றி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழில்கள்[தொகு]

 • இவ்வூரின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. வாழை, தென்னை, நெல், மற்றும் உளுந்து போன்றவற்றை இவ்வூர் மக்கள் விவசாயம் செய்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் வாழை, கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 • விவசாயத்திற்கு அடுத்த படியாக வணிகம் மளிகைக் கடை இவ்வூர் மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளது.[சான்று தேவை]
 • சிவத்தையாபுரம் மக்களில் பெரும்பாலோனோர் சென்னை, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, மும்பை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மளிகை வியாபாரம் செய்து வருகின்றனர்[சான்று தேவை]
 • விவசாயம் மற்றும் வணிகம் மட்டுமின்றி சிவத்தையாபுரம் மக்களின் சந்ததியினர் தனியார், அரசு மற்றும் மென்பொருள் நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்.[சான்று தேவை]

இளைஞர் நற்பணி மன்றம்.[தொகு]

 • சிவத்தையாபுரத்தில் செயல்படும் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவத்தையாபுரம் இளைஞர்கள் இரத்த தான முகாம், மரக்கன்று நடுதல், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற சமூக சீர்த்திருத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.[சான்று தேவை]
 • இளைஞர் நற்பணி மன்றம் மட்டுமல்லாது ஆடவர் மன்றம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இயங்கி வருகின்றன.
 • சிவத்தை இளைஞர்களை உள்ளடக்கிய சிவத்தை துடுப்பாட்ட(cricket) அணி தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த அணிகளில் ஒன்று. பத்துக்கும் மேற்பட்ட துடுப்பாட்டப் போட்டித் தொடர்களில் சிவத்தை துடுப்பாட்ட அணி வெற்றி வாகை சூடியுள்ளது[சான்று தேவை]

பேருந்து வசதி[தொகு]

சாயர்புரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் சிவத்தையாபுரம் செல்கின்றன. சாயர்புரம் வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன.

சந்தை, தேரி, தோட்டக்காடு, செங்குட்டம், சாலை ஆகியன இவ்வூரில் வழங்கி வரும் சில இடக்குறிப்புகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவத்தையாபுரம்&oldid=2478807" இருந்து மீள்விக்கப்பட்டது