உள்ளடக்கத்துக்குச் செல்

சிவசிம்ம மல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசிம்ம மல்லர்
காந்திபூர் மற்றும் இலித்பூரின் அரசன்
1617 தேதியிட்ட, சிவசிம்ம மல்லர் தனது அமைச்சருடன் இருக்கும் ஒரு சாத்தியமான உருவப்படம்.
காந்திபூர் மன்னர்
ஆட்சிக்காலம்1578–1619
முன்னையவர்சதாசிவ மல்லர்
பின்னையவர்இலட்சுமி நரசிம்ம மல்லர்
இலித்பூரின் அரசன்
ஆட்சிக்காலம்1600–1619
முன்னையவர்புரந்தர சிம்மன்
பின்னையவர்சித்தி நரசிம்ம மல்லர்
பிறப்புநேபாளம்
இறப்பு1619
நேபாளம்
துணைவர்கங்கா ராணி
குழந்தைகள்
பெயர்கள்
அரிகர சிம்ம மல்லர்
அரசமரபுமல்லர் வம்சம்
தந்தைமகேந்திர மல்லர்

'சிவசிம்மன் அல்லது சிவசிம்கா என்றும் அழைக்கப்படும் சிவசிம்க மல்லர் (Shiva Simha Malla) மல்லர் வம்சத்தின் ஆட்சியாளரும் காந்திபூரின் ஆறாவது மன்னரும் ஆவார். இவர் தனது சகோதரர் சதாசிவ மல்லர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் 1578 இல் தனது ஆட்சியைத் தொடங்கினார்.[1][2]

வாழ்க்கை

[தொகு]

இவரது சகோதரர் சதாசிவ மல்லர் ஒரு ஒழுக்கக்கேடான மன்னராக இருந்தார். 1578 ஆம் ஆண்டில் சிவசிம்ம மல்லனும் பொது மக்களும் சேர்ந்து பதவி நீக்கம் செய்து அவரை பக்தபூருக்கு நாடுகடத்தினர். பின்னர் சிவசிம்மன் காந்திபூர் மன்னராக முடிசூட்டப்பட்டார் [1]

சிவசிம்ம மல்லர் எளிமையான இயல்புடையவர். 1600 ஆம் ஆண்டில் அவர் இலலித்பூரை இணைத்தார். பின்னர் ஜெயயக்ச மல்னுக்குப் பிறகு இராச்சியம் சிதைந்த காலத்திலிருந்து விஷ்ணுசிம்மரின் சந்ததியினரால் ஆட்சி செய்யப்பட்டது. பின்னர் இவர் தோலகாவைக் கைப்பற்றி காந்திபூரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.[2]

இவர் முதலில் தனது மகன் அரிகர சிம்மனை இலலித்பூரின் ஆளுநராக நியமித்தார். அரிகர சிம்மன் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்தார். பின்னர், அவரது மூத்த மகன் சித்தி நரசிம்ம மல்லன் இஅலித்பூரின் ஆளுநராக இருந்தார்.[2][3]

வாரிசு

[தொகு]

1619இல் சிவசிம்மர் இறந்த பிறகு, அரிகர சிம்மனின் மற்றொரு மகனான இலட்சுமி நரசிம்ம மல்லன் காந்திபூரின் மன்னராக பதவியேற்றார். இந்த சமயத்தில் சித்தி நரசிம்ம மல்லன் காந்திபூரிலிருந்து இலைத்பூர் சுதந்திரமாக இருப்பதாக அறிவித்தார்.[4] இவ்வாறு, சிவசிம்மனால் ஒன்றிணைக்கப்பட்ட காந்திபூர் மற்றும் இலலித்பூர் இராச்சியங்கள் மீண்டும் அவரது பேரன்களால் பிரிக்கப்பட்டன.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Shrestha, D.B.; Singh, C.B. (1972). The History of Ancient and Medieval Nepal (PDF) (in English) (1st ed.). Kathmandu: University of Cambridge. pp. 34–35.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 2.3 Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF) (in English). Kathmandu, Nepal: University of Cambridge. p. 62.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Regmi, Mahesh C.. "Regmi Research Series". German Oriental Society 5: 172–177. https://studylib.net/doc/8525992/regmi_05. 
  4. Burleigh, Peter (16 February 2022). "A Chronology of Later Kings of Patan". University of Cambridge: 30–31. https://www.repository.cam.ac.uk/bitstream/handle/1810/227429/kailash_04_01_02.pdf?sequence=2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசிம்ம_மல்லர்&oldid=4220157" இலிருந்து மீள்விக்கப்பட்டது