சிவசங்கரி சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிவசங்கரி சுப்ரமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவசங்கரி சுப்பிரமணியம்
Sivasangari Subramaniam
தேசம்மலேசியா
வசிப்பிடம்அலோர் செட்டார், கெடா
பிறப்புசனவரி 24, 1999 (1999-01-24) (அகவை 25)
சுங்கை பட்டாணி, மலேசியா
உயரம்160செமீ (5 அடி 3 அங்)
எடை53கிகி
பயிற்சியாளர்யெசி எங்கெல்பிரெக்ட்
பயன்படுத்தப்படும் மட்டைடன்லோப்
பெண்கள் ஒற்றையர்
அதி கூடிய தரவரிசைஇல. 13 (ஏப்பிரல் 2024)
தற்போதைய தரவரிசைஇல. 13 (1 ஏப்பிரல் 2024)
தலைப்பு(கள்)14
இறுதிச் சுற்று(கள்)18
பதக்கத் தகவல்கள்
பெண்கள் சுவர்ப்பந்து
நாடு  மலேசியா
உலக இரட்டையர் வாகை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 கிளாஸ்கோ இரட்டையர்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 காங்சூ ஒற்றையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 காங்சூ அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 சகார்த்தா-பலெம்பாங்கு ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 சகார்த்தா-பலெம்பாங்கு அணி
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 கோலாலம்பூர் ஒற்றையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 கோலாலம்பூர் கலப்பு இரட்டையர்
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 3 ஏப்பிரல் 2024.

சிவசங்கரி சுப்பிரமணியம் (பிறப்பு: 24 சனவரி 1999) மலேசிய சுவர்ப்பந்து வீராங்கனை ஆவார்.[1] இவர் 2018 மே மாதம், உலகத் தரவரிசையில் 38-ஆவது நிலையையும், 2022-ஆம் ஆண்டில் உலகத் தரவரிசையில் 26-ஆவது நிலையையும், 2024 ஏப்ரலில் 13-ஆவது நிலையையும் பெற்றார். இதுவே இதுவரை இவர் பெற்ற சிறப்பு தரவரிசையாகும்.

அத்துடன் ஐவி லீக் (Ivy League) பெண்கள் பிரிவில் 2022 ஆண்டின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.[2] 2018-ஆம் ஆண்டு இவர் சடோமி வாடனபே-வை தோற்கடித்து பிரித்தானிய இளையோர் திறந்த சுற்று வாகையாளர் பட்டதை வென்றார்.

இவர் 2011-ஆம் ஆண்டில் மலேசிய விளையாட்டு மன்றத்தின் சிறந்த வளர்ந்துவரும் விளையாட்டாளர் விருதைப் பெற்றார்.[3]

2018 சூலை 8-இல் நடைபெற்ற 34வது ஓஹன தேசியநிலை சுவர்ப்பந்துப் போட்டியில் லோ வீ வெர்ன் என்பவரை வெற்றி கொண்டு வெற்றியாளர் பட்டத்தைப் பெற்றார். இதன் முலம், சிவசங்கரி மலேசியாவின் மகளிர் ஸ்குவாஷ் போட்டியில், ஆக இளைய விளையாட்டாளராகத் திகழ்கிறார்.[4][5]

2024 ஏப்ரல் 1 இல், இலண்டனில் நடைபெற்ற பி.எஸ்.ஏ உலகச்சுற்று கிளாசிக் இறுதிப் போட்டியில் உலகத் தர வரிசையில் 2-ஆம் நிலையில் உள்ள கனியா எல் அமாமி என்num எகிப்தியரைத் தோற்கடித்து தங்கத்தை வென்றார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மலேசியா, சுங்கை பட்டாணியில் பிறந்த சிவசங்கரி இங்கிலாந்து, கோர்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டக் கல்வி பயில்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "PSA World Tour Rankings - The Professional Squash Association". psaworldtour.com.
  2. "Sivasangari bags Ivy League award". பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
  3. "Hero's welcome for Sivasangari". The Star.
  4. "Subramanian & Yuen claim Malaysian titles". Squash Site Blog. Archived from the original on 2018-09-09. பார்க்கப்பட்ட நாள் 2018-08-27.
  5. "OHANA National Squash Championships 2018". Tornament Software.
  6. GillenMarkets London Classic

வெளி இணைப்புகள்[தொகு]