சிவகுமார் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவா குமார் ராய்
தாய்மொழியில் பெயர்शिवकुमार राई
பிறப்பு(1919-04-26)26 ஏப்ரல் 1919 [1]
ரெனாக், சிக்கிம்
இறப்பு22 சூலை 1995(1995-07-22) (அகவை 76)[1]
டார்ஜீலிங், மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநாவலாசிரியர், எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி
விருதுகள்சாகித்திய அகாதமி விருது,
அகம் சிங் கிரி சாதனை விருது

சிவா குமார் ராய் (Shiva Kumar Rai) என்பவர் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி ஆவார்.[1][2][3] இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். இந்த விருதை தனது கதைகள், கஹாரேய்க்காக 1978ஆம் ஆண்டு பெற்றார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

சிவா குமார் ராய் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று சிக்கிமில் உள்ள ரொனொக்கில் பிறந்தார்.[1] இவரது தந்தை தோஜ்பீர் ராய். சிவா குமார் ராய் தனது கல்வியை புசுபராணி நடுநிலைப்பள்ளியில் தொடங்கி டார்ஜீலிங் அரசுப் பள்ளியில் முடித்தார். இளங்கலைப் பட்டத்தினை டார்ஜீலிங்கில் உள்ள தூய ஜோசப் கல்லூரியில் முடித்து, 1942ஆம் ஆண்டு கொல்கத்தா, தூய சவேரியார் கல்லூரியில் மேற்படிப்பினைத் தொடங்கினார். இந்நேரத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1948ஆம் ஆண்டு ஜொர்புங்கலா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 முதல் 1957 வரை மேற்கு வங்க தொழிலாளர் நல அமைச்சராக இருந்தார். இவர் 22 சூலை 1995 ஆம் ஆண்டில் இறந்தார்.[1]

இலக்கியம்[தொகு]

1930களில் கல்லூரியில் படிக்கும்போது தனது எழுத்துப் பணியினைத் தொடங்கினார். முதலில் பன்சாரி என்ற தலைப்பில் ஒரு இளைஞர் இதழை தொடங்கினார். 1956ஆம் ஆண்டு இவரது கதையின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டது. இது 1969-ல் ரத்னஷரி என்ற கெளரவ விருதை வென்றது. இவரது சிறுகதைகளில் தொகுப்பு 1978-ல் சாகித்திய அகாடமி விருதை வென்றது.

இலக்கியப் படைப்புகள்[தொகு]

  • தாஃபி சரி (1954)
  • தக் பங்லா(1957)
  • கஹரேய் (1976)
  • எல்லைப்புறம் (1956)
  • யாத்ரா (1956)
  • பரா டின்னர் (1978)
  • சிவகுமார் ரா கா காத் கதா (1994)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Shiva Kumar Rai from Darjeeling : The first Gorkha Minister in the state of West Bengal". वीर गोरखा. 9 April 2016. Archived from the original on 2018-10-13. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
  2. "Sahitya Akademi Award winners in Nepali list | Mungpoo News". mungpoo.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-22.
  3. "Mary Martin Booksellers – Shiv Kumar Rai – Makers of India... – Mukhia, Monical. (8126025484)". Mary Martin Booksellers. Archived from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 2014-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகுமார்_ராய்&oldid=3709570" இலிருந்து மீள்விக்கப்பட்டது