உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாசிச் செப்பேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகாசிச் செப்பேடுகள் என்பது பாண்டிய மன்னன் வீரபாண்டியனால் கவிஞர் ஒருவருக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டதை விவரிக்கும் ஒரு பழங்காலச் செப்பேடு ஆகும். இந்தச் செப்பேடு, அதன் முற்பகுதியில் சமஸ்கிருதத்திலும், பிற்பகுதியில் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.[1]

சிவகாசி செப்பேட்டின் முக்கிய அம்சங்கள்

[தொகு]

தானம் பாண்டிய மன்னன் வீரபாண்டியன், ஒரு கவிஞருக்கு நிலத்தை தானமாக வழங்கிய செய்தியை இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

மொழி

[தொகு]

இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இப்பகுதிகள் இருவேறு மொழியில் எழுதப்பட்டுள்ளது. அவை:

சமசுகிருதம்

[தொகு]

செப்பேட்டின் முற்பகுதி சமசுகிருதத்தில், கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. இதில் கடவுள் வாழ்த்து, பாண்டிய குல வரலாறு, கொடையாளி பற்றிய சிறப்பு, மற்றும் கொடை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம்

[தொகு]

இந்தச் செப்பேடு, தமிழ் மற்றும் சமசுகிருத மொழிகளின் கலவை, மற்றும் கொடையின் விவரங்கள் போன்ற தகவல்களைக் கொண்டு, பாண்டியர் காலத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது.

வீர பாண்டியன் (946-966) சிவகாசிச் செப்பேடு [2]

கல்வெட்டு வாசகம்

[தொகு]

ஸ்வஸ்திஸ்ரீ
சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல முழுதாண்டுபண்டு
இந்திரன்முடி வளையுடைத்தும் இமயத்துக் கயலெழுதியும்
ஆனையாயிர மையமிட்டும் அகத்தியனொடு தமிழ்தெரிந்தும்
வானவர்க்குத் தூதுசென்றும் மால்கடலின் வரவுமாற்றியும்
ஈண்டியவக் கடல்கடைந்தும் இன்னனபல திறல்செய்த 5
பாண்டியபர மேச்வரராள் பரம்பரையில் வந்துதோன்றினன்
மன்னவர்க்கோன் இராசமல்லன் மணிமுடிமா னாபரணன்
தென்னவர்க்கோன் மற்றவற்குச் சேரலன்றன் மடப்பாவை
சீர்திகழு மணிபயிலிச் செழுநிலந்தொழ வௌிப்பட்ட
வீரகேரளன் வீரபாண்டியன் விநயகஞ்சுகன் விசாலசீலன் 10
தன்னுடைய குலம்விளங்கத் தன்தேயத் தமிழ்கூடலில்
மன்னியமணி முடிகவித்து மகாபிஷேக மகிழ்ந்தநாளில்
மேதகுசா சனசுலோகம் விதிகிடந்தவா செய்யவல்ல
பூசுரமத் திவன்னதுதன் பூம்பொருநம் புடைவர்க்கும்
சீர்திகழ்தரு முள்ளிநாட்டுத் தென்வீரதர மங்கலத்து 15
ஏர்திகழும் பெருந்தன்மை ராதிதர கோத்திரத்தில்
அளப்பரிய பேரொழுக்கத் தாச்வலாயன சூத்திரத்து
விளக்கமுற வந்துதோன்றி விப்ரர்க்கோர் விளக்காயின
ஒருதன்மை இருபிறப்பில் முச்செந்தீ நால்வேதத்து
அருமரபில் ஐவேள்வி ஆறங்கத் தந்தணாளன் 20
கோவிந்தஸ்வாமி பட்டர்க்குச் சோமாசிதன் குலவரவில்
வாசுதேவ பீதாம்பர பட்டனென்ற மறைவாழ்நனை
மதித்தருளி நீசெய்கென மற்றவனு மனமகிழ்ந்து
விதித்தமைத்த அநுஷ்டுப்பின் விழுப்பநோக்கி மிகமகிழ்ந்து
தனக்கிரண்டாமாண்டின் எதிராமாண்டில் 25
அண்டநாட்டு மின்னுக்கொடி நெடுமாடவீதி. . .

மேற்கோள்கள்

[தொகு]
  1. . https://www.shanlaxjournals.in/pdf/TS/V1N4/TS_V1_N4_021.pdf. 
  2. "sivakasi seppedugal". valaitamil.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாசிச்_செப்பேடுகள்&oldid=4375247" இலிருந்து மீள்விக்கப்பட்டது