சிவகங்கை சசிவர்ணத்தேவர் பள்ளிப்படை
Appearance
சசிவர்ணேசுவரர் கோயில் சசிவர்ணத் தேவர் பள்ளிப்படை | |
---|---|
பெயர் | |
பெயர்: | சசிவர்ணேசுவரர் கோயில் சசிவர்ணத் தேவர் பள்ளிப்படை |
அமைவிடம் | |
ஊர்: | சிவகங்கை |
மாவட்டம்: | சிவகங்கை மாவட்டம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சசிவர்ணேசுவரர் |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | பெரியநாயகி |
தல விருட்சம்: | வில்வம் |
ஆகமம்: | சிவாகமம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | சிவகங்கைச் சீமை பள்ளிப்படை |
வரலாறு | |
தொன்மை: | கி.பி.1751 |
அமைத்தவர்: | முத்துவடுகத்தேவர் |
சசிவர்ணத் தேவர் பள்ளிப்படை அல்லது சசிவர்ணேசுவரர் கோயில் என்பது சிவகங்கைச் சீமையின் முதலாம் மன்னரான சசிவர்ணத் தேவர்க்கு அமைக்கப்பட்ட ஒரு பள்ளிப்படையாகும். இதை கட்டியவர் இவரது மகனும் சிவகங்கை மன்னருமான முத்து வடுகநாதர் தேவர் ஆவார். இது தமிழகத்தின், சிவகங்கையில், சிவகங்கை அரண்மனையின் வடகிழக்கே கட்டப்பட்டுள்ளது.
கோயில் பற்றிய செப்பேடு
[தொகு]தன் தந்தை சசிவர்ணத் தேவர்க்காக 1751இல் இந்த பள்ளிப்படைக் கோயிலை சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர்தேவர் சிற்ப முறைப்படி அமைத்து சிவலிங்கத்தைப் பிரதிட்டைச் செய்தார். இந்த திருக்கோயிலுக்கு திருவிடையாட்டக் காணியாக காத்தாடியேந்தல் வாணியங்குடி, மானங்குடி, முடிக்கரை ஆகிய நான்கு ஊர்களையும் இறையிலியாக வழங்கிய ஆணையே செப்பேட்டில் வெளியிட்டுள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டாக்டர் எஸ். எம். கமால் (1997). சீர்மிகு சிவகங்கைச் சீமை. சிவகங்கை: பசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையம். pp. 58-59.