சில்விரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்விரானா
சில்விரானா நிக்ரோவிட்டடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
குடும்பம்:
இரணிடே
பேரினம்:
சில்விரானா

துபாய்சு, 1992
மாதிரி இனம்
சில்விரானா நிக்ரோவிட்டடா
பிளைத், 1855
சிற்றினம்

12 சிற்றினங்கள் (உரையினை காண்க)

வேறு பெயர்கள் [1]

பெளலெஞ்செரானா பெய், யெ, & ஜியாங், 2010

சில்விரானா (Sylvirana) என்பது உண்மையான தவளைகளின் இரானிடே குடும்ப பேரினமாகும். இவை தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில், மேற்கில் வடகிழக்கு இந்தியாவிலிருந்து வடக்கே சீனா, கிழக்கில் தைவான் மற்றும் தெற்கில் தாய்லாந்து வரை காணப்படுகிறது.[1][2] 1992-ல் இவை இரானாவின் துணையினமாக முன்மொழியப்பட்டது. பின்னர் இது ஒரு முழு பேரினமாகவும் கைலரானாவின் துணைப்பேரினமாவும் கருதப்பட்டது. 2015-ல் வெளியிடப்பட்ட மூலக்கூறு மரபணு பகுப்பாய்வுகளிலிருந்து தற்போதைய அங்கீகாரம் பொதுவான அளவில் உள்ளது.[1][3]

விளக்கம்[தொகு]

சில்விரானா பொதுவாக நடுத்தர அளவிலான தவளை ஆகும். இவை வலுவான உடல்களைக் கொண்டுள்ளன. இவை பாபுரானாவில் உள்ளதைப் போன்ற கண்ணுக்குப்பின் மூடிகளைக் கொண்டுள்ளன. மேல் உதடு சாம்பல் நிறமாகவோ, வெண்மையாகவோ அல்லது பொரிகளுடன் காணப்படும். முதுகுபுறம் நுண்முட்களுடன் காணப்படும். முதுகுபுறம் நடுத்தர அளவிலான நன்கு வளர்ந்த, வெளிர் அல்லது முதுகுபுறத்தின் அதே நிறத்துடன் காணப்படும். பக்கவாட்டு முகடுகளுக்குக் கீழே இருண்ட நிறமுடையது. இவை நன்கு வரையறுக்கப்பட்ட கரும்புள்ளிகளுடன் காணப்படும். ஆண்களுக்கு ஒரு இணை குரல் பை உள்ளது. இவை உள் அல்லது வெளிப்புறமாக இருக்கலாம்.[3]

சிற்றினங்கள்[தொகு]

12 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1][2] சில்விரானா அனாமிட்டிகா செரிடன் மற்றும் இசுடூவர்ட், 2018 சில்விரானா குயூபிடலிசு (சுமித், 1917) சில்விரானா பேபர் (ஓஹ்லர், சுவான் மற்றும் டால்ட்ரி, 2002) சில்விரானா குன்தேரி (பௌலேஞ்சர், 1882) சில்விரானா லாக்ரிமா செரிடன் மற்றும் சுடூவர்ட், 2018 சில்விரானா மலாயா சுரிடன் மற்றும் இசுடூவர்ட், 2018 சில்விரானா மாசோனென்சிசு (போர்ரெட், 1937) சில்விரானா மாண்டோசா செரிடன் மற்றும் இசுடூவர்ட், 2018 சில்விரானா மோர்டென்செனி (பவுலேஞ்சர், 1903) சில்விரனா நிக்ரோவிட்டடா (பிளைத், 1856) சில்விரானா ராபர்டி செரிடன் மற்றும் இசுடூவர்ட், 2018 சில்விரானா பைனுலோசா (சுமித், 1923)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Frost, Darrel R. (2020). "Sylvirana Dubois, 1992". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  2. 2.0 2.1 "Ranidae". AmphibiaWeb. University of California, Berkeley. 2019. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  3. 3.0 3.1 Oliver, Lauren A.; Prendini, Elizabeth; Kraus, Fred; Raxworthy, Christopher J. (2015). "Systematics and biogeography of the Hylarana frog (Anura: Ranidae) radiation across tropical Australasia, Southeast Asia, and Africa". Molecular Phylogenetics and Evolution 90: 176–192. doi:10.1016/j.ympev.2015.05.001. பப்மெட்:25987527. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்விரானா&oldid=3936337" இலிருந்து மீள்விக்கப்பட்டது