சில்வியா பேரன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்வியா பேரன்ட்
தனிநபர் தகவல்
தேசியம்இத்தாலியர்
விளையாட்டு
நாடுஇத்தாலி
விளையாட்டுமாற்றுத் திறனாளி பனிச்சறுக்கு
நிகழ்வு(கள்)டௌன்ஹில்l
ஸ்லாலோம்
ஜெயன்ட் ஸ்லாலோம்
சூப்பர்-ஜி
பதக்கத் தகவல்கள்
மகளிர் மாற்றுத் திறனாளி பனிச்சறுக்கு
நாடு  இத்தாலி
குளிர்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 டௌன்ஹில் பார்வைக் குறைபாடு பிரிவு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 துரின் சூப்பர்-ஜி பார்வைக் குறைபாடு பிரிவு
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 துரின் ஜெயன்ட் ஸ்லாலோம் பார்வைக் குறைபாடு பிரிவு

சில்வியா பேரன்ட் இவர் (மிலன், இத்தாலி, செப்டம்பர் 29, 1969) இத்தாலிய இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றவராவார். துரினில் நடைபெற்ற 2006 குளிர்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், இரண்டு வெண்கலத்தையும் வென்றார். [1] [2] 1992 ஆல்பர்ட்வில் இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும், 1998 நாகானோ இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றார்.

சுயசரிதை[தொகு]

இவர் தனது மூன்று வயலேயே பார்வையற்றவராக இருந்தார். கணினி நிரலாக்கராகப் பயிற்றுவிக்கப்பட்ட இவர், எப்போதும் விளையாட்டு நடவடிக்கைகளை வளர்த்து வந்தார்.முதலில் ஆல்பைன் பனிச்சறுக்குகளில் அனைத்து நிலைகளிலும் பயிற்சி பெற்றார். 1994 இல் வெண்கலப் பதக்கத்தை வென்ற பிறகு, லில்லிஹாம்மர் இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், லோரென்சோ மிக்லியாரியின் வழிகாட்டுதலின் பேரில், 2006 இல் துரின் இணை ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு பதக்கங்களை (மூன்று வெண்கலங்கள், ஒரு தங்கம்) பெற்றார். துரின் செயல்திறன் இவருக்கு ஏராளமான விருதுகளைக் கொண்டு வந்தது, இதில் கோல்டன் காலர் ஃபார் ஸ்போர்டிங் மெரிட், இது கோனி வழங்கிய மிக உயர்ந்த கௌரவமாகும்.

பின்னர் இவர் இணை ஒலிம்பிக் விளையாட்டில் பனிசறுக்குதலுக்காக தன்னை அர்ப்பணித்தார். இதில் இவர் 2011 இல் உலக வெற்றியாளராகவும், 2013 இல் ஐரோப்பா வெற்றியாளராகவும் இருந்தார். 2010 இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பார்வையற்றோர் ஹோமரஸ் பார்முலாவி உலகப்போட்டியில், முன்னாள் இணை ஒலிம்பிக் தடகள வீரரும், பனிசறுக்கு வீரருமான லூய்கி பெர்டான்சாவுடன் இணைந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Turin Paralympics: First Italian Medal". aroundtherings.com (in ஆங்கிலம்). Archived from the original on 2020-09-02. பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.
  2. "CBC.CA - Torino 2006 Paralympics". www.cbc.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வியா_பேரன்ட்&oldid=3842363" இலிருந்து மீள்விக்கப்பட்டது