சில்வினைட்டு
தோற்றம்


சில்வினைட்டு (Sylvinite) என்பது ஒரு படிவுப் பாறை வகை கனிமமாகும். சில்வைட்டு எனப்படும் (KCl) பொட்டாசியம் குளோரைடும் ஆலைட்டு எனப்படும் (NaCl) சோடியம் குளோரைடும் கலந்த கனிமங்களின் கலவையாக இது உருவாகிறது.[1][2] வட அமெரிக்கா, உருசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பொட்டாசு உற்பத்திக்கு சில்வினைட்டு மிக முக்கியமான ஆதாரமாக உள்ளது.[2][3] பெரும்பாலான கனடிய செயல்முறைகள் சில்வைனைட்டை தோராயமாக 31% KCl மற்றும் 66% NaCl விகிதத்தில் வெட்டி எடுக்கின்றன. மீதமுள்ளவை கரையாத களிமண், நீரிலி மற்றும் சில இடங்களில் கார்னலைட்டு போன்றவையாகும். சில்வினைட்டின் பிற படிவுகள் பெலாரசு, பிரேசில், பிரான்சு, செருமனி, கசகசுத்தான், சுலோவாக்கியா மற்றும் எசுப்பானியாவில் அமைந்துள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wardlaw, Norman C. (1968). "Carnallite-Sylvite Relationships in the Middle Devonian Prairie Evaporite Formation, Saskatchewan". Geological Society of America Bulletin 79 (10): 1273–1294. doi:10.1130/0016-7606(1968)79[1273:CRITMD]2.0.CO;2. Bibcode: 1968GSAB...79.1273W.
- ↑ 2.0 2.1 Weiss N.L., SME Mineral Processing Handbook 1985, Page 22-2
- ↑ "Potash". Mineral Planning Factsheet. British Geological Survey. 2011. Retrieved 8 February 2017.
- ↑ "Sylvinite". mindat.org. 29 December 2016. Retrieved 8 February 2017.