சில்வா லெவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சில்வா லெவி
Silvain Lévi
பிறப்புமார்ச்சு 28, 1863(1863-03-28)
பாரிசு, பிரான்சு
இறப்புஅக்டோபர் 30, 1935(1935-10-30) (அகவை 72)
பாரிசு, பிரான்சு
துறைசமசுக்கிருத மொழி, இலக்கியம், பௌத்தம்
பணியிடங்கள்பிரான்சு கல்லூரி
குறிப்பிடத்தக்க மாணவர்கள்பவுல் தெமியேவில், பவும் பெலியட்

சில்வா லெவி (Sylvain Lévi) ஒரு கீழைத்தேசவியலாளரும், இந்தியவியலாளரும் ஆவார்.[1] 1863 மார்ச் 28 ஆம் தேதி பாரிசில் பிறந்த இவரது தியேட்டர் இந்தியென் (Théâtre Indien) அத்துறையில் மிக முக்கியமான நூலாகும். மேற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தொக்காரிய எச்சங்களைப் பற்றியும் இவர் ஆய்வுகள் நடத்தியுள்ளார்.

பழங்கால மனிதர்களுக்கு, நேரடியாகவே மூலாதார உண்மை உணர்த்தப்பட்டது என்ற கருத்தைக் கொண்ட "நிலைத்த மெய்யியல்'' என்னும் நம்பிக்கையைக் கொண்டிருந்த, மரபுவாத அறிஞரான ரெனே கினூவின்(René Guénon) தொடக்ககால எதிர்ப்பாளராக இவர் விளங்கினார்.

மேற்கோளகள்[தொகு]

  1. "Sylvain Levi (French orientalist)". Encyclopedia Britannica. 13 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வா_லெவி&oldid=2707308" இருந்து மீள்விக்கப்பட்டது