உள்ளடக்கத்துக்குச் செல்

சில்வர் லைனிங்சு பிளேபுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சில்வர் லைனிங்சு பிளேபுக்
இயக்கம்டேவிட் ஓ. ரஸல
தயாரிப்புBruce Cohen
Donna Gigliotti
மூலக்கதைThe Silver Linings Playbook
படைத்தவர் Matthew Quick
திரைக்கதைDavid O. Russell
இசைDanny Elfman
நடிப்புபிராட்லி கூப்பர்

ஜெ:னிஃபர் லாரன்ஸ் ராபர்ட் டி நீரோ

கிரிஷ் டக்கர்
ஒளிப்பதிவுMasanobu Takayanagi
படத்தொகுப்புJay Cassidy
Crispin Struthers
கலையகம்The Weinstein Company
Mirage Enterprises
விநியோகம்The Weinstein Company
வெளியீடுசெப்டம்பர் 8, 2012 (2012-09-08)(TIFF)
நவம்பர் 16, 2012 (USA)
ஓட்டம்122 minutes[1]
நாடுUnited States
மொழிEnglish
ஆக்கச்செலவு$21 million[2]
மொத்த வருவாய்$236,412,453[2]

கதைச் சுருக்கம்

[தொகு]

டேவிட் ஓ. ரஸலின் சில்வர் லைனிங் ப்ளேபுக் 8 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹேங்ஓவர் படத்தில் நடித்த பிராட்லி கூப்பர், ராபர்ட் டி நீரோ, ஜெ:னிஃபர் லாரன்ஸ், கிரிஷ் டக்கர் நடித்துள்ளனர். மேத்யூ க்யிக் இதே பெயரில் எழுதிய நாவலை மேத்யூவுடன் இணைந்து திரைக்கதை அமைத்து டேவிட் ஓ.ரஸல் இயக்கியுள்ளார்.

பேட் (Patrizio Solitano) எட்டு மாத மனநல சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறான். அவனுக்கு இருப்பது bipolar disorder எனப்படும் மனநோய். (இந்த நோயை வைத்து தமிழில் 3, ஆரோகணம் படங்கள் வந்துள்ளன) பேட்-டின் நோய்க்கூறு காரணமாக அவனது மனைவி நிக்கி இப்போது அவனுடன் இல்லை. பேட்-டின் தந்தை பேட் சீனியருக்கும் இப்போது வேலையில்லை. ஹோட்டல் ஒன்றை தொடங்க தேவையான பணத்தை புரட்டும் வேலையில் அவர் இருக்கிறார்.

பார்க்க இயல்பாகத் தோன்றும் இருக்கும் பேட் தரும் தொந்தரவுகள் கொஞ்சம் விசித்திரமானவை. ஹெமிங்வேயின் நாவலைப் படித்துவிட்டு கதையின் முடிவு சரியில்லை என்று கத்தி கூப்பாடு போட்டு தனது பெற்றோரை கடுப்படிக்கிறான். அவன் ஆர்ப்பாட்டம் செய்வது ஊரே தூங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவில். இன்னொருமுறை தனது திருமண வீடியோவை காணாததற்கு.

பேட் இப்படி நடந்து கொண்டால் அவனைவிட பல மடங்கு கிரேஸியாக நடந்து கொள்கிறாள் டிஃப்னி. பேட்-டின் நண்பன் மனைவியின் சகோதரி. அவளை சமீபத்தில்தான் வேலையிலிருந்து நீக்கியிருந்தனர். தனது கணவன் இறந்ததால் அலுவலகத்தில் உள்ள அனைவருடனும் செக்ஸ் வைத்துக் கொண்டதுதான் அவள் வேலையிலிருந்து நீக்கப்பட காரணம். அலுவலகத்தில் அவளுடன் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை பதினொன்று. இதில் பெண்களும் அடக்கம்.

இரண்டு எக்ஸ்ட்ரீம் கேரக்டர்கள். இவர்கள் பரஸ்பரம் தங்களுக்குள் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. பேட் சீனியர் தனது நண்பனுடன் வைத்துக் கொள்ளும் பெட், இறுதியில் வரும் நடனப் போட்டியில் பேட்-டும், டிஃப்னியும் நன்றாக நடனமாடி ஐந்து பாயிண்ட்கள் வெல்வது எல்லாம் தமிழ்ப் படம் பார்ப்பதான எண்ணத்தை தோற்றுவிக்கும்.

பேட் ஏன் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான் என்பதற்கான காரணத்தை சொல்லும் விதம் இயக்குனரின் கதை சொல்லலுக்கு சிறந்த உதாரணம். ஹைஸ்கூல் ஆசியரான பேட் (ஹேங்ஓவரிலிலும் பிராட்லி கூப்பருக்கு வாத்தியார் வேடம்தான்) ஒருநாள் சீக்கிரமாக வீடு திரும்புகிறான். வீட்டில் அவனது திருமண பாடல் ஒலிக்கிறது. அவன் மனைவி நிக்கியின் உடைகள் ஒவ்வொன்றாக கழற்றி வீசப்பட்டது போல் தரையில் கிடக்கிறது. அதை பின் தொடர்ந்து வரும் பேட் குளியலறைக்கு வருகிறான். அங்கு நிக்கி நிர்வாணமாக குளித்துக் கொண்டிருக்கிறாள். அப்பா... நிம்மதி என்று நினைக்கிறவேளை, அவள் அருகில் இன்னொருவன் குளித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அவனை அடித்து துவைக்கிறான் பேட்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு தனது திருமண பாடலை கேட்கும் போதெல்லாம் பேட் வயலண்டாகிறான். குழப்பமான நேரங்களில் அந்தப் பாடல் மண்டைக்குள் கேட்கத் தொடங்க அவனது சமநிலை குலைந்து போகிறது. இந்த அக நெருக்கடியிலிருந்து டிஃப்னி அவனை மீட்கிறாள். இந்த இடம்தான் படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது.

பேட் மீது பரிதாபப்பட்டு அவனை அணுகாமல் அவனே பயந்து போகும் அளவுக்கு வயலாண்டாக நடந்து கொள்கிறாள் டிஃப்னி. அவன் தரும் கடிதத்தை நிக்கியிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் தான் கலந்து கொள்ளப் போகிற நடனப் போட்டியில் தனது பார்ட்னராக உடன் நடனமாட வேண்டும் என அவனை நடனத்தின் பக்கம் திருப்புகிறாள்.

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Silver Linings Playbook". BBFC. November 11, 2012. http://www.bbfc.co.uk/AFF292856. பார்த்த நாள்: December 27, 2012. 
  2. 2.0 2.1 "Silver Linings Playbook". பாக்சு ஆபிசு மோசோ. IMDb. 2012. Archived from the original on டிசம்பர் 18, 2015. பார்க்கப்பட்ட நாள் May 3, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)