சில்லிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1933 ஆம் ஆண்டின் ஒன்றியப் பேரரசின் சில்லிங்
1956 ஆம் ஆண்டில் எலிசபெத் II ஆட்சிக்காலத்தில் ஒன்றியப் பேரரசின் சில்லிங்கின் ஆங்கிலேய மற்றும் இசுகாட்டிய பின்புறங்கள்

சில்லிங் (shilling) எனப்படுவது ஆசுத்திரியா, ஐக்கிய பிரித்தானிய ராச்சியம், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட பணத்தாளின் ஒரு அலகு ஆகும். தற்போது சில்லிங் என்ற பணத்தாள் அலகானது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, தான்சானியா, உகாண்டா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது, இது கிழக்கு ஆப்பிரிக்க சமுதாய நாடுகளால் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள நாணய மதிப்பாகவும் உள்ளது, சில்லிங் என்ற வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையான "Scilling" என்பதிலிருந்து உருவானதாகும். இதன் மதிப்பானது ஒரு பவுண்டில் இருபதில் ஒரு பங்கு என்பதாகும். இதன் மூல வார்த்தையான புரோடோசெருமானிய வார்த்தை பிரிப்பதற்கு, பகுப்பதற்கு என்ற பொருளைத் தருகிறது. சில்லிங் (Scilling) என்ற வார்த்தை மிகத் தொன்மையான காலத்தில் பயன்படுத்தப்பட்ட செருமானிய சட்டக் குறியீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழைய சில்லிங் நாணயங்களுக்கான வழக்குச் சொற்கள் "பாப்" மற்றும் "ஹாக்" போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன. While the derivation of "பாப்" என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது என்பது நிச்சயமற்றதாகத் தெரிகிறது. சான் கேம்டென் ஆட்டன் 1864 ஆம் ஆண்டில் தனது வழக்குச்சொல் அகராதியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், இந்தச்சொல்லின் மூல வடிவம் சர் இராபர்ட் வால்போல் என்பவருடன் தொடர்புடைய "பாப்ஸ்டிக்" என்தாக இருக்கலாம் என்று யூகிக்கிறார்.[1]

1816 ஆம் ஆண்டில் நடந்த பெரிய புது நாணயமாக்க காலத்தின் போது நாணய உற்பத்திக் கூடங்கள் திராய் வகை பவுண்டினை (5760 தானிய எடை அல்லது373 கி) உடைய இசுடெர்லிங் வெள்ளி கொண்டு 66 சில்லிங்குகள் அல்லது அதற்குச் சமானமான வகை நாணயங்கள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்ட இதுவே சில்லிங்கின் எடையை தீர்மானிக்கப்பட்ட விதமாகும்.

பிரிட்டன் தீவுகள்[தொகு]

இங்கிலாந்துப் பேரரசு[தொகு]

இங்கிலாந்தின் ஏழாம் என்றியின் ஆட்சிக்காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயம் ஆகும்.[2] (அல்லது இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டின் ஆட்சிக்காலத்தில் சற்றேறக்குறைய 1550 ஆம் ஆண்டு), 1707 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்தலுக்கான அரசாணை வந்த பிறகு, ஒருங்கிணைப்பு தொடர்பான சட்டப்பிரிவு 16 இன் கீழ் இங்கிலாந்து மற்றும் இசுகாட்லாந்து ஆகிய பேரரசுகள் ஒரு ஒருங்கிணைந்த பேரரசினை உபயோகிக்கத் தொடங்கிய காலத்தில் சில்லிங் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது.

இசுகாட்லாந்து இராச்சியம்[தொகு]

சில்லிங் என்ற வார்த்தையானது இசுகாட்லாந்தில் தொடக்க வரலாற்று இடைக்காலத்தின் தொடக்கத்தில் இருந்து உபயோகத்தில் இருந்து வந்துள்ளது,

பிரிட்டன் மற்றும் ஒன்றியப் பேரரசு[தொகு]

1707 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்பிற்கான உடன்படிக்கை சட்டப்பிரிவு 16 இன்படி பொதுவான நாணயமானது உருவாக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு தசமமாக்குதல் வரை இதன் பயன்பாடு தொடர்ந்தது.

மரபு சார்ந்த முறையில், ஒரு பவுண்டு என்பது 20 சில்லிங்குகளாகவும், சில்லிங் என்பது 12 பென்னிகளாகவும் கொள்ளப்பட்டது, ஒரு பவுண்டு என்பது 240 பென்சுகள் அல்லது பென்னிகளாக இருந்தது,

மூன்று நாணயங்கள் சில்லி்ங்களின் மடங்குகளைக் குறிப்பதாக இருந்தன. மேலும், அவை சமகாலகட்டத்தில் புழக்கத்திலும் இருந்தன, அவை:

  • புளோரின்(பிரிட்டன் நாணயம்), இரு சில்லிங்குகள் (2/–), இது பத்து புதிய பென்சுகளுக்குச் சமமானது,
  • ஆஃப் கிரெளன், இரு சில்லிங்குகள் மற்றும் ஆறு பென்சுகள் அல்லது ஒரு பவுண்டின் எட்டில் ஒரு பங்கு, இது தசமமாக்கலின் போது வழக்கொழிந்து போனது,
  • கிரெளன் (பிரிட்டன் நாணயம்) (ஐந்து சில்லிங்குகள்)

1971 ஆம் ஆண்டில் புதிய நாணயமாக்கல் மற்றும் தசமமாக்கலின் போது, சில்லிங் நாணயமானது புதிய ஐந்து பென்சு நாணயத்தால் மாற்றாக்கப்பட்டது, தொடக்கத்தில் இது அளவு, எடை மற்றும் மதிப்பில் சில்லிங்குடன் ஒத்ததாக இருந்தது, மேலும் சில்லிங்கின் வழக்குப்பெயரான பாப் என்பதையும் கொண்டிருந்தது.1991 ஆம் ஆண்டில் ஐந்து பென்சு நாணயத்தின் அளவு குறைக்கப்படும் வரையிலும் சில்லிங் புழக்கத்தில் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. John Camden Hotten (1864). Slang Dictionary. 
  2. "Understanding old British money - pounds, shillings and pence". மூல முகவரியிலிருந்து 27 September 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லிங்&oldid=2813231" இருந்து மீள்விக்கப்பட்டது