சில்சிலா ஆச்சார்யா
சில்சிலா ஆச்சார்யா | |
|---|---|
| பிறப்பு | பாக்லுங் |
| தேசியம் | நேபாள நாட்டவர் |
| கல்வி | காத்மாண்டு பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | நெகிழி மறுசுழற்சி, பிரச்சாரம் |
சில்சிலா ஆச்சார்யா (Shilshila Acharya) நேபாளத்தைச் சேர்ந்த நெகிழி மறுசுழற்சியை அதிகரிப்பதற்கான வெற்றிகரமான பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கிய நேபாளச் சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆவார். இவர் தனது நாட்டின் நெகிழிப் பைகளின் பயன்பாட்டைக் குறைத்துள்ளார். மேலும் மலையேறுபவர்களால் கைவிடப்பட்ட குப்பைகளை மீட்டெடுத்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் பிபிசியின் உத்வேகமளிக்கும் 100 பெண்களின் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார்.
வாழ்க்கை
[தொகு]சில்சிலா ஆச்சார்யா, நேபாளத்தின் பாக்லுங்கில் பிறந்தார். இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியலில் பட்டம் பெற்றார். நிதி நிலைமை அவ்வளவு எளிதாக இல்லாவிட்டாலும், சுற்றுச்சூழல் அறிவியல் படிக்க விரும்புவதாக தன் குடும்பத்தினரை வற்புறுத்தினார். சுற்றுச்சூழல் அறிவியலுக்கு உதவித்தொகை இல்லாததால் காத்மாண்டு பல்கலைக்கழகத்தில் தனது கல்விக்கு இவர் பணம் செலுத்த வேண்டியிருந்தது. பட்டம் பெற்ற பிறகு, நேபாளம் மற்றும் நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் நோர்வே சென்றார். இவர் திரிபுவன் பல்கலைக்கழகம் மற்றும் பெர்கன் பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலைப் படித்தார். மேலும் இத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1][2]
ஆரம்பகாலத்தில் நேபாள நெடுஞ்சாலையில் மரங்கள் நடப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.[3]
பிரச்சாரம்
[தொகு]2014 ஆம் ஆண்டில், நேபாளத்தில் நெகிழிப் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதால் இமயமலை காலநிலை முன்முயற்சியில் சேர்ந்தார்.[3] இவரது குழு வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்பியது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, இவரது குழு, ஒரு பெரிய பல்பொருள் அங்காடிச் சங்கிலியான பட்-பத்தேனி சூப்பர் மார்க்கெட் என்ற வணிக நிறுவனத்துடன் ஒரு கூட்டுறவில் இணைந்தது.[3] துணிப் பைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. மக்கள் அவற்றை வாங்கினார்கள். ஆனால் அவர்கள் அவற்றைப் பயன்படுத்தவில்லை. மக்களை ஈர்க்கக்கூடிய ஒரு புதிய வழியைக் கண்டுபிடிக்க குழு முயன்றது.[4] இவர்களின் "நெகிழிப் பை வேண்டாம் நன்றி, நான் என் சொந்த பையை எடுத்துச் செல்கிறேன்" என்பதுதான் இவர்களின் புதிய பிரச்சாரமாக இருந்தது. இது மக்களின் நடத்தையை மாற்றியது. இது நேபாள அரசாங்கத்தை காத்மாண்டுவில் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதை தடை செய்ய வழிவகுத்தது.[5]
2018 ஆம் ஆண்டில் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் அதன் 25 வது ஆண்டு விழாவை நேபாளத்தில் கொண்டாடியது. மேலும் நிதியம் தங்கள் பாதுகாப்பு விருதுகளை மறுசீரமைக்க முடிவு செய்தது. இமயமலை காலநிலை முன்முயற்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியதற்காக தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட அவர்களின் விருதுகளில் ஒன்றை சில்சிலா ஆச்சார்யா பெற்றார்.[6]
2019 ஆம் ஆண்டில் மலையேறுபவர்களைச் சந்திப்பதன் மூலம் இமயமலையில் எஞ்சியிருக்கும் பெரிய அளவிலான கழிவுகளைக் குறைப்பதற்கான பிரச்சாரத்தில் சிசிலா ஈடுபட்டார். இவரது பிரச்சாரத்தின் விளைவாக கிட்டத்தட்ட 120 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.[5]
2024 ஆம் ஆண்டில் பிபிசியின் உத்வேகமளிக்கும் 100 பெண்களின் பட்டியலில் சேர இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ of 2024, Ganesh Khatiwada :: Silsila Acharya Named Among BBC’s 100 Influential Women. "Silsila Acharya Named Among BBC's 100 Influential Women of 2024". ecospherenews. Retrieved 2024-12-08.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Shilshila Acharya – Avni" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-12-08.
- 1 2 3 Rich, Carrie; Fealk, Dean (2022-05-10). Impact the World: Live Your Values and Drive Change As a Citizen Statesperson (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 108. ISBN 978-1-119-84891-2.
- ↑ "Beating Plastic Pollution with Shilshila Acharya". www.wwfnepal.org (in ஆங்கிலம்). Retrieved 2024-12-08.
- 1 2 "Climate Pioneer Shilshila Acharya listed among BBC 100 Women 2024". kathmandupost.com (in English). Retrieved 2024-12-07.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "CONSERVATION AWARDS 2018" (PDF). WWF Nepal. 2018. Retrieved 8 December 2024.
- ↑ "BBC 100 Women 2024: Who is on the list this year? - BBC News". News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2024-12-07.