சிலோன் (நிரலாக்க மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சிலோன்
Ceylon
நிரலாக்கக் கருத்தோட்டம்:பொருள் நோக்கு
வெளியிடப்பட்டது:2011
வடிவமைப்பாளர்:கவின் கிங், ரெட் ஹட்
இயல்பு முறை:நிலையான, மாறாத, பாதுகாப்பான
அனுமதி:அப்பாச்சே வி2
இணையதளம்:http://ceylon-lang.org/

சிலோன் (Ceylon) என்பது ரெட் ஹட் உருவாக்கிய, வரவிருக்கின்ற நிரல் மொழியும் மென்பொருள் மேம்படுத்தல் தொகுதியும் ஆகும். ஜாவாவினை அடிப்படையாகக் கொண்ட இது வெளியானதும், ஜாவா மெய்நிகர்க் கருவியில் இயங்கக்கூடியது.[1] இலங்கையின் முன்னைய பெயர்களில் ஒன்றான சிலோன் என்பதிலிருந்து இதற்குப் பெயர் உருவாகியது. ஜாவாத் தீவிற்கு தேயிலை பெயர் பெற்றதுபோல் இலங்கைத் தீவுக்கும் தேயிலை பெயர் பெற்றது என்ற அர்த்தத்தில் ஜாவா நிரல் மொழியும் சிலோன் நிரலாக்க மொழியும் தொடர்புபடுகின்றன.[2]

நிரல் மொழியின் பண்புகள்[தொகு]

சிலோன் ஜாவா நிரல் மொழியின் வரியமைப்பை அதிகம் கொண்டிருக்கிறது. பின்வரும் வரிகள் Hello world என்பதை வெளியீடாக்க சிலோன் நிரலாக்க மொழியில் எழுதப்படும்:[3]

void hello() {  

    print("Hello, World!");  

}

உசாத்துணை[தொகு]

  1. "Project Ceylon – Red Hat builds Java replacement". The Register. 2011-04-13. பார்க்கப்பட்ட நாள் 2011-11-27.
  2. The Ceylon Project - about:software development
  3. Gavin King (2011-04-27). "Introduction to Ceylon Part 1". பார்க்கப்பட்ட நாள் 2011-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலோன்_(நிரலாக்க_மொழி)&oldid=1472372" இலிருந்து மீள்விக்கப்பட்டது