சிலையெழுபது
Appearance
சிலையெழுபது (Silaiyezhupathu) என்பது ஒரு தமிழ் இலக்கியம் ஆகும். இது கம்பரால் இயற்றப்பட்டது என்றொரு கருத்தும், வேறொருவரால் இயற்றப்பட்டது எனும் இன்னொரு கருத்தும் உள்ளது.[1] கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய பள்ளியரின் பெருமையைப் பற்றி கம்பர் பாடியது இந்நூல் எனப்படுகிறது. இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.[2][3]
நூலின் சிறப்புகள்
சிலையெழுபது வன்னியர் குலத்தின் பெருமைகளையும், அவர்களின் வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஒரு நூல் ஆகும்
பாயிரம்
- கணபதி துதி
- நூற்பெயரும் நூல்செய்தார் பெயரும் நுவலல்
- நூலரங்கேறிய கச்சித்தலச் சிறப்பு
- சம்புகோத்திரச் சிறப்பு
- குலோற்பவச் சிறப்பு
- வன்னியர் குலச் சிறப்பு
- குலத்தலைவர் படைச் சிறப்பு
நூல்
- விசயதசமி நாட்கோடற் சிறப்பு
- வில் வலிமையால் வாழும் உலகம்
- வன்னியர் ஏந்திய வில்லே, வில்
- விற்போரில் மகிழ்பவர்கள்
- வில்லின் வளைவுகள்
- விற்பிடித்தல் சிறப்பு
- வில்லால் விளைந்த நன்மை
- வில்மணிச் சிறப்பு
- நாணின் சிறப்பு
- வில்லேந்துதற் சிறப்பு
- உலகம் செழிப்பது வில்லாலே
- விற்போர் சிறப்பு
- படை எழுந்தால் அரக்கர் அழிவர்
- வில்வளைத்தற் சிறப்பு
- நாணேற்றுதற் சிறப்பு
- குணத்தொனிச் சிறப்பு
- அம்பறாத்தூணிச் சிறப்பு
- பிரமாத்திரச் சிறப்பு
- நாராயணாத்திறச் சிறப்பு
- பாசுபதாத்திரச் சிறப்பு
- அபிமந்திரித்தற் சிறப்பு
- நாணிறங்குதற் சிறப்பு
- வீரவாட் சிறப்பு
- வேலேந்திய காலாட்படைச் சிறப்பு
- யானைப்படைச் சிறப்பு
- குதிரைப்படைச் சிறப்பு
- தேர்ப்படைச் சிறப்பு
- பிறர் தேரும் இவர் தேரும்
- அகழியின் சிறப்பு
- அரண் சிறப்பு
- கொடிச் சிறப்பு
- அரசாட்சி மண்டபச் சிறப்பு
- சிங்காதனத்திருத்தற் சிறப்பு
- டிதரித்தற் சிறப்பு
- மகுடங்கள் நிலைப்பது இவர் மகுடத்தாலே
- புயகேயூர கிரீடச் சிறப்பு
- குடைச் சிறப்பு
- செங்கோற் சிறப்பு
- செங்கோல்வண்மைச் சிறப்பு
- செங்கோல்நடத்தற் சிறப்பு
- அறநெறியின் சிறப்பு
- ஆக்கினைச் சக்கரச் சிறப்பு
- தொழில்நெறி பிறழாமைச் சிறப்பு
- முத்திரைமோதிரச் சிறப்பு
- துட்டநிக்கிரகச் சிறப்பு
- வாயில்மேவுதற் சிறப்பு
- தொழுதல் முதலிய சிறப்பு
- செல்வாக்கின் சிறப்பு
- வன்னியரின் புகழ்
- திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்றோர்
- மாசு அகற்றற் சிறப்பு
- எல்லாவிதத்திலும் சிறந்தோர்
- குணச் சிறப்பு
- இதயவண்மைச் சிறப்பு
- இராஜசமூகச் சிறப்பு
- பதியிருத்தற் சிறப்பு
- மன்னர்சூழ்தற் சிறப்பு
- மொழிதவறாமைச் சிறப்பு
- சாந்தம் முதலிய பண்புகளாற் சிறப்பு
- கொடைவளத்தின் சிறப்பு
- வள்ளல்தன்மைச் சிறப்பு
- அடுத்தவர்க்குத் தாழ்வின்றெனல் சிறப்பு
- உமை முதலியோரின் அருள்பெற்றோரெனற் சிறப்பு
- அஷ்ட ஐசுவரியச் சிறப்பு
- தசாங்கச் சிறப்பு
- அரசின் சிறப்பு
- வில்லின் புகழ்கூறுதற் சிறப்பு
- பரிசுதரற் சிறப்பு
- இதுமுதல் மூன்று கவிகள் - வாழ்த்துச் சிறப்பு (69, 70, 71)
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ முனைவர் தெ. ஞானசுந்தரம், மறவாதியர் யார்? மலட்டு ஆ எது?, தமிழ்மணி, தினமணி, 11, சனவரி, 2015
- ↑ துரை ராசாராம் (1999). கம்பனின் சிற்றிலக்கியங்கள். முல்லை நிலையம். p. 319.
- ↑ "சிலையெழுபது - Silaiyelupathu - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com". சென்னை நூலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-08-12.
- ↑ சிலையெழுபது.