உள்ளடக்கத்துக்குச் செல்

சிலியின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கி.மு. 3000 முதல் சிலியில் மக்கள் குடியேறி வாழத் தொடங்கி இருக்கலாம். 16 ஆம் நூற்றாண்டில், எசுப்பானியாவின் வெற்றியாளர்கள் இன்றைய சிலியின் பகுதியை அடக்கி காலனித்துவப்படுத்தத் தொடங்கினர். கி.மு 1540 மற்றும் 1818 க்கு இடையில் இப்பகுதி ஒரு காலனியாக இருந்தது. முதல் வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடங்கியது. பின்னர் சோடியம் நைட்ரேட்டு, தாமிரம் போன்றவை அடுத்தடுத்து ஏற்றுமதிப் பட்டியலில் வந்தன. மூலப்பொருட்களின் வளம் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததோடு, சார்புத்தன்மைக்கும், அண்டை நாடுகளுடனான போர்களுக்கும் வழிவகுத்தது. சிலி சுதந்திரம் பெற்ற முதல் 150 ஆண்டுகளில் பல்வேறு வகையான கண்காணிப்புடைய சட்டதிட்டங்கள் உடைய அரசாங்கங்களால் நிர்வகிக்கப்பட்டது. அங்கு வாக்காளர்கள் கவனமாக விசாரிக்கப்பட்டு ஒரு உயரடுக்கினரால் கட்டுப்படுத்தப்பட்டனர்.

பனிப்போரின் விளைவாக, பொருளாதார மற்றும் சமூக உயர்வுகளை சரி செய்வதில் உள்ள தோல்வி மற்றும் குறைந்த வசதி படைத்த மக்களிடம் அதிகரித்த அரசியல் விழிப்புணர்வு, அமெரிக்க நடுவண் ஒற்று முகமையால் முக்கிய அரசியல் குழுக்களுக்கு வழங்கப்பட்ட மறைமுக தலையீடு மற்றும் பொருளாதார நிதியுதவி, போன்றவை சோசலிச ஜனாதிபதி சால்வடார் அலெண்டேவின் கீழ் அரசியல் முனைவுறுத்தலுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக 1973 சதித்திட்டம் மற்றும் ஜெனரல் அகஸ்டோ பினோசேவின் இராணுவ சர்வாதிகாரம் ஆகியவற்றை விளைவித்தன. அதன் பின்னர் 17 ஆண்டுகால ஆட்சியானது பல மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆழ்ந்த சந்தை சார்ந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்கு காரணமாக இருந்தது . இறுதியாக, 1990 இல், சிலி ஒரு அமைதியான மக்களாட்சிக்கு மாற்றம் கண்டது.

ஆரம்பகால வரலாறு (1540 க்கு முன்)[தொகு]

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, குடியேறிய பூர்வீக அமெரிக்கர்கள் இன்றைய சிலியின் வளமான பள்ளத்தாக்குகளிலும் கரையோரப் பகுதிகளிலும் குடியேறினர். இசுப்பானிக் காலத்திற்கு முந்தைய சிலி பன்னிரெண்டு வெவ்வேறு அமெரிண்டியன் சமூகங்களுக்கு சொந்தமானது. தற்போதைய நடைமுறையில் உள்ள கோட்பாடுகள் என்னவென்றால், இக்கண்டத்திற்கு மனிதர்களின் ஆரம்ப வருகை பசிபிக் கடற்கரையோரத்தில் தெற்கே க்ளோவிஸ் கலாச்சாரத்திற்கு முந்தைய விரைவான விரிவாக்கத்திலோ அல்லது பசிபிக் மறுபக்க இடம்பெயர்விலோ நடந்திருக்கும்.[1]

இத்தகைய பன்முகத்தன்மை இருந்தபோதிலும், பழங்குடி மக்களை மூன்று முக்கிய கலாச்சார குழுக்களாக வகைப்படுத்த முடியும்: வளமான கைவினைத் தொழில்களை வளர்த்தெடுத்த வடக்கத்திய மக்கள், சௌபா ஆறு மற்றும் சிலோ தீவு இவறறுக்கிடையே உள்ள பகுதியில் குடியேறிய அராவ்கேனிய கலாச்சாரத்தைப் பின்பற்றும், விவசாயத்தை அடிப்படயைாக் கொண்டு வாழும் மக்கள், பல்வேறு நாடோடி மரபு பழங்குடியினரை உள்ளடக்கிய, மீன்பிடி மற்றும் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்ட படகோனிய கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் ஆகியோர் ஆவர். எந்த விரிவான, மையப்படுத்தப்பட்ட, நிலைத்தமர்ந்த நாகரிகமும் உச்சத்தில் ஆட்சி செய்யவில்லை.[2]

அராவ்கேனியர்கள், வேட்டைக்காரர்கள், உணவு சேகரிப்பாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட துண்டு துண்டான சமூகம், சிலியில் மிகப்பெரிய பூர்வீக அமெரிக்க குடிமைக்குழுவை உருவாக்கியது. பிற பழங்குடி குழுக்களுடன் வர்த்தகம் மற்றும் போரில் ஈடுபட்ட ஒரு நாடோடி இன மக்கள், சிதறிய குடும்பக் குழுக்களிலும் சிறிய கிராமங்களிலும் வாழ்ந்தனர். அராவ்கேனியர்களுக்கு எழுத்து வடிவ மொழி இல்லை என்றாலும், அவர்கள் ஒரு பொதுவான மொழியைப் பயன்படுத்தினர். மத்திய சிலி பகுதியில் வாழ்ந்தவர்கள் நிலைத்த வாழ்க்கையைக் கொண்டவர்களும் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தியவர்களும் ஆவார்கள். தெற்கில் உள்ளவர்கள் வேட்டையாடலையும், விவசாயத்தையும் இணைந்து செய்து வந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hogan, C. Michael; Andy Burnham ed. (2008). Pali Aike. Megalithic Portal. {{cite book}}: |author2= has generic name (help)
  2. Bengoa, Jose (2000). Historia del pueblo mapuche: (siglo XIX y XX) (in Spanish). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9562822329.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலியின்_வரலாறு&oldid=2867756" இலிருந்து மீள்விக்கப்பட்டது