சிலிக்கோவெப்ப வினைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிலிக்கோவெப்ப வினைகள் (Silicothermic reactions) என்பவை உயர் வெப்பநிலைகளில் (800-1400° செல்சியசு) சிலிக்கானை ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தும் வினைகளைக் குறிக்கும். மக்னீசியம் தாதுக்களில் இருந்து மக்னீசியம் உலோகத்தைப் பிரித்தெடுக்க உதவும் பிட்கியான் செயல்முறையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். போல்சனோ செயல்முறை, மக்னெவெப்பச் செயல்முறை உள்ளிட்டவை பிற உதரணங்களாகும். இவை மூன்றும் மக்னீசியம் உற்பத்தி செய்யும் வர்த்தக முறைகளாகும்.

இரண்டாம் உலகப் போரின் போது மெக்னீசியம் உற்பத்திக்கான சிலிக்கோவெப்ப செயல்முறை வணிகரீதியாக கனடாவில் உருவாக்கப்பட்டது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopedia of materials, parts and finishes, 2nd edition, Mel M. Schwartz, 2002, p. 371, ISBN 1-56676-661-3