உள்ளடக்கத்துக்குச் செல்

சிலிக்கா கந்தக அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலிக்கா கந்தக அமிலம் (Silica sulfuric acid) (SiO2-OSO3H2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. திண்மநிலை அமிலமான இதை சிலிக்கா கூழ்மத்தை கந்தக அமிலத்தில் சேர்த்து ஊற வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. [1]பல்வேறு கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையூக்கியாக சிலிக்கா கந்தக அமிலம் பயன்படுத்தப்படுகிறது. [2][3]சிலிக்கா சல்பூரிக் அமிலம் மலிவானது அபாயமற்றது மற்றும் அதிக அமிலத்தன்மை கொண்ட திண்ம அமிலமாக ஒரு வினையூக்கியாகக் கையாள எளிதானது என்று கருதப்படுகிறது. [4]

தயாரிப்பு

[தொகு]

பொருத்தமான செறிவு கொண்ட கந்தக அமிலத்தில் சிலிக்கா கூழ்மத்தை ஊறவைப்பதன் மூலம் சிலிக்கா கந்தக அமிலம் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அதிக வெப்பநிலையில் (120–180 °செல்சியசு) கலவையை வெப்பப்படுத்துவதன் மூலம் ஈரப்பதமும் நீரும் ஆவியாகும். [1][5]

SiO2–OH2 + HO–SO3H → SiO2–OSO3H2 + H2O

பயன்கள்

[தொகு]

சிலிக்கா கந்தக அமிலம் பெரும்பாலும் கரிமச் சேர்ம மாற்றத்தில் ஒரு திண்ம அமில வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது. [2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Riego, Juan M; Sedin, Zeno; Zaldívar, JoséM; Marziano, Nunziata C; Tortato, Claudio (1996-01-22). "Sulfuric acid on silica-gel: an inexpensive catalyst for aromatic nitration". Tetrahedron Letters 37 (4): 513–516. doi:10.1016/0040-4039(95)02174-4. 
  2. 2.0 2.1 Zolfigol, Mohammad Ali (2001-11-12). "Silica sulfuric acid/NaNO2 as a novel heterogeneous system for production of thionitrites and disulfidesunder mild conditions". Tetrahedron 57 (46): 9509–9511. doi:10.1016/S0040-4020(01)00960-7. 
  3. 3.0 3.1 Salehi, Peyman; Dabiri, Minoo; Zolfigol, Mohammad Ali; Bodaghi Fard, Mohammad Ali (2003-03-31). "Silica sulfuric acid: an efficient and reusable catalyst for the one-pot synthesis of 3,4-dihydropyrimidin-2(1H)-ones". Tetrahedron Letters 44 (14): 2889–2891. doi:10.1016/S0040-4039(03)00436-2. 
  4. Sadeghi, Bahareh; Nejad, MahboobehGhasemi (2012-07-19). "Silica Sulfuric Acid: An Eco-Friendly and Reusable Catalyst for Synthesis of BenzimidazoleDerivatives" (in en). Journal of Chemistry 2013: 1–5. doi:10.1155/2013/581465. பன்னாட்டுத் தர தொடர் எண்:2090-9063. 
  5. Manna, Joydev; Roy, Binayak; Sharma, Pratibha (2015-02-01). "Efficient hydrogen generation from sodium borohydride hydrolysis using silica sulfuric acid catalyst". Journal of Power Sources 275: 727–733. doi:10.1016/j.jpowsour.2014.11.040. Bibcode: 2015JPS...275..727M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்கா_கந்தக_அமிலம்&oldid=3151597" இலிருந்து மீள்விக்கப்பட்டது