சிலிக்காலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலிக்காலைட்டு
பண்புகள்
O2Si
வாய்ப்பாட்டு எடை 60.08 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.76 கி/செ.மீ3
உருகுநிலை 1,300 °C (2,370 °F; 1,570 K) சிதைவு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சிலிக்காலைட்டு (Silicalite) என்பது SiO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் கானப்படும் இச்சேர்மம் சிலிக்கன் டை ஆக்சைடின் பல வடிவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நான்முக சிலிக்கான் மையங்களும் இரண்டு-ஒருங்கிணைந்த ஆக்சைடுகளும் இதன் கட்டமைப்பில் உள்ளன. டெட்ராபுரோப்பைலமோனியம் ஐதராக்சைடை நீர்வெப்ப வினைக்கு உட்படுத்தி சிலிக்காலைட்டு தயாரிக்கப்படுகிறது. அதன்பின் நெருப்பிலிட்டு சூடாக்கி எஞ்சியிருக்கும் அம்மோனியம் உப்புகள் அகற்றப்படுகின்றன. 33% நுண்துளை கால்சியம் கொண்டிருப்பதால் சிலிக்காலைட்டு குறிப்பிடத்ததாகக் கருதப்படுகிறது. 0.6 நானோ மீட்டர் விட்டம் கொண்ட நீர்நாட்ட மூலக்கூறுகளை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கும் (SiO) 10 வளையங்களை உள்ளடக்கியதால் இது பயனுள்ளதாகவும் உள்ளது.[1]

Si1−xTixO2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட தைட்டானியம் சிலிக்காலைட்டு சிலிக்காலைட்டின் வணிக ரீதியாக முக்கியமான மாறுபாடாகும். சில Si தளங்களில் Ti கலப்பு செய்யப்பட்ட சிலிக்காலைட்டுகள் இதில் உள்ளன. தைட்டானியம் டை ஆக்சைட்டின் வழக்கமான பல்வடிவங்கள் போலல்லாமல், தைட்டானியம் சிலிக்காலைட்டில் உள்ள Ti மையங்கள் நான்முக ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளன. ஐதரசன் பெராக்சைடு புரோப்பைலீனுடன் வினைபுரிந்து புரோப்பைலீன் ஆக்சைடை வழங்கும் வினையில் இந்த வேதிப்பொருள் பயனுள்ள ஓர் ஊக்கியாக உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. E. M. Flanigen, J. M. Bennett, R. W. Grose, J. P. Cohen, R. L. Patton, R. M. Kirchner, J. V. Smith (1978). "Silicalite, a New Hydrophobic Crystalline Silica Molecular Sieve". Nature 271 (5645): 512–516. doi:10.1038/271512a0. Bibcode: 1978Natur.271..512F. 
  2. Georgi N. Vayssilov (1997). "Structural and Physicochemical Features of Titanium Silicalites". Catalysis Reviews 39 (3): 209–251. doi:10.1080/01614949709353777. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்காலைட்டு&oldid=3423131" இலிருந்து மீள்விக்கப்பட்டது