உள்ளடக்கத்துக்குச் செல்

சிலிக்கான் வேலி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலிக்கான் வேலி வங்கி -->
நிலைதிவாலான வங்கி
நிறுவுகைஅக்டோபர் 17, 1983; 41 ஆண்டுகள் முன்னர் (1983-10-17)[1]
செயலற்றதுமார்ச்சு 10, 2023; 20 மாதங்கள் முன்னர் (2023-03-10)
முதன்மை நபர்கள்
    • கிரேக் பெக்கர், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி
    • ரோஜர் எப். துன்பார், முன்னாள் தலைவர்
    • மைக்கேல் ஆர். டெஸ்செனெக்ஸ், முன்னாள் நிறுவனத் தலைவர்
தொழில்துறைநிதிச் சேவைகள்
[2]

சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank (SVB), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்ட கிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், அமெரிக்காவின் 16வது பெரிய வணிக வங்கி ஆகும். 10 மார்ச் 2023 அன்று இந்த வங்கி நிர்வாகம் நிதிச் சுமையால் திவால் ஆனது என அமெரிக்க அரசின் நிதித்துறையால் அறிவிக்கப்பட்டது.[3][4] [5] இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் மூலதன நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான வைப்பு நிதி பெறுகிறது. புதிதாக தொழில் தொடங்கிய இந்திய நிறுவனங்கள், இவ்வங்கியில் ரூபாய் 8,000 கோடி சேமிப்பு கணக்கு வைத்துள்ளது.[6]

திவால்

[தொகு]

2022 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 174 பில்லியன் டாலர்கள் வைப்பு நிதியாக இருந்தது. சிலிக்கான் வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது. நிதி நிலை அறிக்கையில் உள்ள நிதிப்பற்றாக்குறையைச் சரிகட்ட 2 பில்லியன் டாலர்கள் நிதியைப் பெற திட்டமிட்டுள்ளதாக சிலிகான் வேலி வங்கி அறிவித்த 48 மணி நேரத்தில் மார்ச் 2023 தொடக்கத்தில் அதன் பங்குகள் கடுமையாக சரிந்தன. அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்ததால் சிலிகான் வேலி வங்கி திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலிகான் வேலி வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தையில் அந்த வங்கி பங்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் சிலிகான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய வைப்புக் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி திவாலானதால் அந்த வங்கியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்பப்பெற வங்கி வாசலில் காத்துள்ளனர். இந்த வங்கியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய பங்குச்சந்தையில் வங்கி தொடர்பான பங்குகள் பெரும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[7] மேலும் சிலிகான் வேலி வங்கி தகவல் தொழில்நுட்பத்துறையிலும் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்ததால், தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான பங்குகளும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கி திவாலானது இதுவே முதல்முறையாகும். சிலிகான் வேலி வங்கி திவால் உலக அளவில் வங்கித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Silicon Valley Bancshares (March 19, 1999). "Silicon Valley Bancshares Form 10-K" (PDF). EDGAR. Securities and Exchange Commission. p. 3. Archived (PDF) from the original on March 10, 2023. பார்க்கப்பட்ட நாள் March 11, 2023.
  2. "SVB Financial Group 2022 Annual Report (Form 10-K)". U.S. Securities and Exchange Commission. March 1, 2022. Archived from the original on March 10, 2023. பார்க்கப்பட்ட நாள் March 10, 2023.
  3. Why did Silicon Valley Bank fail? The story behind the largest financial crisis in US after 2008
  4. "Large Commercial Banks". Federal Reserve. Archived from the original on July 8, 2021. பார்க்கப்பட்ட நாள் March 11, 2023..
  5. "FDIC BankFind". Federal Deposit Insurance Corporation. March 3, 2023. Archived from the original on March 11, 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-11.
  6. ரூ.8,000 கோடி: திவாலான வங்கியில் இந்திய ஸ்டார்ட்அப்களின் டெபாசிட்
  7. அமெரிக்க வங்கி திவால்: இந்திய ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் கவலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்கான்_வேலி_வங்கி&oldid=3679417" இலிருந்து மீள்விக்கப்பட்டது