சிலாவ் தற்காப்பு
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நகர்வுகள் | 1.d4 d5 2.c4 c6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | D10–D19 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மூலம் | இராணியின் பலியாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிலாவ் தற்காப்பு (Slav Defense) என்பது கீழ்வரும் நகர்வுகளுடன் தொடங்கப்படும் சதுரங்கத் திறப்பு ஆட்டம் ஆகும்:
இது இராணியின் பலியாட்டத்திற்கு எதிரான ஆட்டங்களின் முதன்மையான தற்காப்புகளுள் ஒன்றாகும். இது 1590 ஆம் ஆண்டிலேயே பகுப்பாய்வு செய்யப்பட்டிருந்தாலும், 1920களில்தான் இது விரிவாக ஆராயப்பட்டது. இருப்பினும் இசுடெய்னிட்சு என்பவர் 1886 இல் முதலாவது அதிகாரப்பூர்வ உலக சதுரங்க வாகையின்போது இதை எழுதினார். செமியோன் அலப்பின், அலெக்சாந்தர் அலேகின், போகோல்சுபோவ், மிலன் விட்மர் உள்ளிட்ட சிலாவிக் வம்சாவளியைச் சேர்ந்த பல சதுரங்க மேதைகள் இந்த தொடக்கக் கோட்பாட்டை உருவாக்க உதவினார்கள்.
1935, 1937 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு அலேகின்-யூவே உலக சதுரங்க வாகைப் போட்டிகளின் போது சிலாவ் தற்காப்பு முழுமையாக சோதிக்கப்பட்டது. முதல் 13 உலக வாகையாளர்களில் 11 பேர் இந்தத் தற்காப்ப்பை விளையாடினார்கள். குறிப்பாக யூவே, மிக்கைல் பொத்வின்னிக், வசீலி சிமீசிலோவ் ஆகியோரால் விரும்பப்பட்டது. அண்மைக் காலங்களில் விசுவநாதன் ஆனந்த், வசீலி இவான்சுக், லாட்டியர், நைஜல் சோர்ட் போன்ற பல சிறந்த கிராண்ட்மாஸ்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதில் 2006 உலக வாகையில் விளாதிமிர் கிராம்னிக் கறுப்புக் காய்களுடன் விளையாடிய எட்டு ஆட்டங்களில் ஆறு பயன்படுத்தப்பட்டது.
இன்று சிலாவ் தற்காப்பின் கோட்பாடு மிகவும் விரிவாகி, நன்கு வளர்ந்துள்ளது.
உசாத்துணைகள்
[தொகு]- Burgess, Graham (2000). The Mammoth Book of Chess. Carroll & Graf. ISBN 0-7867-0725-9.
- Burgess, Graham (2001). The Slav. Gambit. ISBN 1-901983-44-7.
- Fine, Reuben (1990). Ideas Behind the Chess Openings. Random House Puzzles & Games. ISBN 0-8129-1756-1.
- Nunn, John (1999). Nunn's Chess Openings. Everyman. ISBN 1-85744-221-0.