உள்ளடக்கத்துக்குச் செல்

சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 2023

 2018 12 ஆகத்து 2023 2028 

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கான 56 தொகுதிகளில்
அதிகபட்சமாக 29 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்72.00%
  Majority party Minority party Third party
 
தலைவர் அமிரூதின் அசுமின் அலி சையது சாதிக்
கட்சி பிகேஆர்
அம்னோ
பெர்சத்து மூடா
சமூகம்
கூட்டணி பாக்கா
பாரிசான்
பெரிக்கா மூடா
சமூகம்
தலைவரான
ஆண்டு
2020
2022
2021 2020
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சுங்கை துவா உலு கிள்ளான் -
வென்ற
இருக்கைகள்
34
78.68%[nb 1]
22[nb 2] 0
மாற்றம் 11 Increase 17
மொத்த வாக்குகள் 1,621,820 1,012,543 34,009
விழுக்காடு 61.1% 37.62% 1.28%
மாற்றம் 17.83% Increase 16.93%

முந்தைய மந்திரி பெசார்

அமிரூதின் சாரி
பாக்காத்தான்
(பிகேஆர்)

மந்திரி பெசார்

அமிரூதின் சாரி
பாக்காத்தான்
(பிகேஆர்)

சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 2023 (மலாய்: Pilihan Raya Negeri Selangor 2023; ஆங்கிலம்: 2023 Selangor State Election) என்பது மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் 12 ஆகத்து 2023 அன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் 15-ஆவது தேர்தலைக் குறிப்பிடுவதாகும்.

அக்டோபர் 10, 2022 அன்று மலேசிய மக்களவையுடன் ஒரே நேரத்தில் கலைக்கப்படாத மாநிலங்களில் சிலாங்கூரும் ஒன்றாகும். இது பாக்காத்தான் அரப்பான் கூட்டணியினால் அக்டோபர் 15, 2022 அன்று முடிவு செய்யப்பட்டது.[1]

பாரிசான் நேசனல் (BN) - பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணிகள், தேர்தல் உடன்படிக்கையின் மூலமாக 56 இடங்களில் 34 இடங்களைக் கைப்பற்றி தேர்தலில் வெற்றி பெற்றன. அதில் பாக்காத்தான் அரப்பான் 32 இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையைப் பெற்றது; பாரிசான் நேசனல் 2 இடங்களைப் பெற்றது. பெரிக்காத்தான் நேசனல் (PN) கூட்டணி மீதமுள்ள 22 இடங்களை வென்று மாநிலச் சட்டமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது.

பின்னணி

[தொகு]

2018 பொதுத் தேர்தலில், பாக்காத்தான் அரப்பான் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றியது; மாநிலத்தின் 56 இடங்களில் 51 இடங்களை வென்றது. 2020–2022 மலேசிய அரசியல் நெருக்கடியின் தொடக்கத்தில், நாடளாவிய நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், அந்த நெருக்கடி சிலாங்கூர் மாநில அளவிலான அரசியலைப் பாதிக்கவில்லை. பாக்காத்தான் அரப்பான் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்தது.[2][3]

ஆகத்து 6, 2020 அன்று, பினாங்கு முதலமைச்சர், சாவ் கொன் யாவ், பாக்காத்தான் அரப்பான் அரசாங்கத்தைக் கொண்ட அனைத்து மாநிலங்களும் (சிலாங்கூர் மாநிலம் உட்பட), விரைவான மலேசியப் பொதுத் தேர்தலுடன் இணைந்து மாநில சட்டமன்றங்களைக் கலைக்காது என்ற தன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். ஏனெனில் அந்த நேரத்தில், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கங்கள் நிலையான பெரும்பான்மையைக் கொண்டிருந்தன. இந்தக் கட்டத்தில், 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் மாநில அரசாங்க்ங்களின் கலைப்பு இருக்காது என்பதை பாக்காத்தான் அரப்பான் தலைமையகம் மேலும் வலியுறுத்தியது.[4]

தொகுதிகள்

[தொகு]

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 56 தொகுதிகளும் தேர்தலின் போது போட்டியிட்டன.

மாநிலத் தொகுதி வாரியாக மலேசியப் பொதுத் தேர்தல், 2022 முடிவுகள்.
     பாக்காத்தான்;      பெரிக்காத்தான்      பாரிசான்

கலைப்புக்கு முந்தைய சட்டமன்ற அமைவு

[தொகு]
அரசாங்கம் + நம்பிக்கை ஆதரவு எதிரணி
PH BN WARISAN PBM PN PEJUANG
40 5 1 2 5 3
19 15 6 5 4 1
PKR DAP AMANAH UMNO WARISAN PBM BERSATU PAS PEJUANG

மாநிலத் தேர்தல் முடிவுகள்

[தொகு]
கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%இருக்கைகள்+/–
பாக்காத்தான் அரப்பான் +
பாரிசான் நேசனல்
ஜசெக5,82,77621.7515–1
பிகேஆர்5,82,59121.7512–9
அம்னோ2,46,0239.182–2
அமாணா2,10,4307.865–3
மொத்தம்16,21,82060.5434–15
பெரிக்காத்தான் நேசனல்பெர்சத்து5,71,10621.3212+6
பாஸ்3,68,89113.7710+9
கெராக்கான்72,5462.7100
மொத்தம்10,12,54337.8022+15
மூடா + சமூகக் கட்சிமூடா27,7521.040புதிது
சமூகக் கட்சி6,2570.2300
மொத்தம்34,0091.2700
மலேசிய மக்கள் கட்சி2,8240.110புதிது
மக்களின் முதல் கட்சி6680.0200
சுயேச்சை6,9940.2600
மொத்தம்26,78,858100.0056

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tiga negeri di bawah PH kekal tidak bubar DUN - Anwar". www.astroawani.com. Retrieved 2022-10-28.
  2. "Sultan Selangor perkenan bubar Dun Selangor 23 Jun". Harian Metro (in ஆங்கிலம்). 2023-06-19. Retrieved 2023-06-19.
  3. "Selangor bubar DUN Jumaat ini". Harian Metro (Klang, Selangor: New Straits Times Press): p. 10. 20 Jun 2023.
  4. Mok, Opalyn (August 6, 2020). "Chow: Penang may not dissolve state assembly if a snap election is called". Malay Mail.

குறிப்புகள்

[தொகு]
  1. Total seats won by parties currently in PH and BN. PH's current composition won 45 seats and BN's won 4; vote tally includes Malaysian Indian Congress and [Malaysian Chinese Association even though they are not contesting this election as they are still part of BN.
  2. New coalition formed in 2020. These numbers are the total seats and vote share of BERSATU, PAS and GERAKAN in the last election. The parties were previously part of Pakatan Harapan, Gagasan Sejahtera and Barisan Nasional.

வெளி இணைப்புகள்

[தொகு]