சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாட்
| சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாட் Abdul Samad of Selangor Sultan Abdul Samad, Selangor | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
சுல்தான் அப்துல் சமாட் (1890) | |||||||||
| 4-ஆவது சிலாங்கூர் சுல்தான் | |||||||||
| ஆட்சிக்காலம் | 6 சனவரி 1857 – 6 பெப்ரவரி 1898 | ||||||||
| முன்னையவர் | சுல்தான் முகமட் சா | ||||||||
| பின்னையவர் | சுல்தான் சுலைமான் | ||||||||
| பிறப்பு | ராஜா இப்ராகிம் பின் ராஜா லுமு (1736) 1804 புக்கிட் மெலாவத்தி, சிலாங்கூர் | ||||||||
| இறப்பு | 6 பெப்ரவரி 1898 (வயது 93-94) இசுதானா பண்டார் தெமாசா, ஜுக்ரா, சிலாங்கூர், கூட்டமைப்பு மாநிலங்கள் | ||||||||
| மனைவிகள் |
| ||||||||
| குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
| மரபு | அரச லூவு பூகிஸ் ஒப்பு டாயேங் செலாக் | ||||||||
| தந்தை | சுல்தான் இப்ராகிம் சா | ||||||||
| தாய் | செ லிப்பா | ||||||||
| மதம் | சன்னி | ||||||||
சுல்தான் அப்துல் சமாட் அல்லது சிலாங்கூர் சுல்தான் சர் அப்துல் சமாட் KCMG (ஆங்கிலம்: Sultan Sir Abdul Samad Raja Bendahara Raja Abdullah; மலாய்: Sultan Sir Abdul Samad Shah ibni Almarhum Yamtuan Muda Riau II Opu Daeng Chelak; (சாவி: سلطان عبد الصمد ابن المرحوم راج عبد الله; சீனம்: 雪兰莪州的阿卜杜勒·萨马德) (1804 – 6 பெப்ரவரி 1898) என்பவர் 6 சனவரி 1857 முதல் 6 பெப்ரவரி 1898 வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர்; மற்றும் 4-ஆவது சிலாங்கூர் சுல்தான் ஆவார்.
சுல்தான் அப்துல் சமாட் 1804 ஆம் ஆண்டு சிலாங்கூரில் உள்ள புக்கிட் மெலாவத்தியில், சிலாங்கூர் சுல்தான் முகமட் சாவின் தம்பி ராஜா அப்துல்லாவுக்கு மகனாகப் பிறந்தார். 1857-ஆம் ஆண்டு முதல், 1898-ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை, 41 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
அவர் ஆட்சி புரிந்த காலத்தில், சிலாங்கூரில், கிள்ளான் போர் எனும் உள்நாட்டுப் போர் நடந்தது; கோலாலம்பூர் நகரம் நிறுவப்பட்டது; சிலாங்கூர் கொடி; மற்றும் சிலாங்கூர் சின்னம் அறிமுகப் படுத்தப்பட்டன; மற்றும் சிலாங்கூர் மாநிலச் செயல்பாடுகளில் பிரித்தானியர்களின் ஈடுபாடுகள் தொடங்கின.[1][2][3]
அரியணை
[தொகு]
சுல்தான் இப்ராகிம் சாவின் ஆட்சியின் முடிவில் சிலாங்கூரில் அதிகாரப் போராட்டம் ஏற்பட்டது. சுல்தான் இப்ராகிம் சாவின் மருமகன் ராஜா அப்துல் சமாட் 1844-இல் சுல்தான் இப்ராகிம் சாவின் மகள் ராஜா அத்பாவைத் திருமணம் செய்து கொண்டார். சுல்தான் அப்துல் சமாட் அரியணை ஏறும் வரையில், ராஜா அப்துல் சமாட் என்று அழைக்கப்பட்டார்.
அந்தத் திருமணத்தின் மூலம் ராஜா அப்துல் சமாட் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் ராஜா அப்துல் சமாட், சிலாங்கூர் பள்ளத்தாக்கின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1850-களில், போர்க் காலத்தின் போது, ராஜா அப்துல் சமாட் ஏராளமான ஆண்களைக் கொன்றதாகவும் பிராங்க் சுவெட்டன்காம் எனும் மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் எழுதியுள்ளார். இதை ராஜா அப்துல் சமாட் மறுக்கவில்லை.[4]
உட்பூசல்
[தொகு]சிலாங்கூர் சுல்தானாகப் பதவி ஏற்பதற்கு முன்பு, ராஜா அப்துல் சமாட் தெங்கு பாங்லிமா ராஜா (Tengku Panglima Raja) என்ற பட்டத்தை வகித்தார்; மற்றும் லங்காட் மாவட்டத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டார். சுல்தான் முகமட் சா, 1857 சனவரி 6 அன்று வாரிசு எவரையும் நியமிக்காமலேயே மரணம் அடைந்தார். இதுவே அடுத்த சுல்தானைத் தேர்ந்தெடுப்பதில் சிலாங்கூர் அரச அவைக்கும் - சிலாங்கூர் அரசு தலைவர்களுக்கும் இடையே ஓர் உட்பூசலைத் தொடக்கியது.
மலாய் பழக்கவழக்கங்கள், அடுத்த சுல்தானைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு வரைமுறையைக் கொண்டுள்ளன. அதாவது ஓர் அரச மனைவியின் மகன் மட்டுமே மற்ற மனைவிகளின் மகன்களை விட முன்னுரிமை பெற வேண்டும் என்று வரையறை செய்துள்ளன.
ராஜா லாவுட்
[தொகு]
அந்த வரையறையின் அடிப்படையில் சுல்தான் முகமட் சாவின் மூத்த மகன் ராஜா முகமது என்பவர் அடுத்த வாரிசாகத் தகுதி பெற்றார். ஆனால் அவர் மிகவும் இளமையாக இருந்ததால் ஆட்சி செய்ய இயலாமல் போனது. அடுத்ததாக, சுல்தான் முகமட் சாவின் மூத்த மற்றும் திறமையான மகன்களான ராஜா லாவுட் (Raja Laut) மற்றும் ராஜா சுலைமான் (Raja Sulaiman) ஆகியோர் வைப்பாட்டிகளின் மகன்கள் ஆவார்கள்.
சுல்தான் முகமட் சாவின் மருமகன்களான ராஜா ஜுமாத் (Raja Jumaat) மற்றும் ராஜா அப்துல்லா (Raja Abdullah) ஆகியோர் இரியாவு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக அவர்கள் அனைவரும் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். அந்த வகையில், ராஜா அப்துல் சமாட் மட்டுமே பொருத்தமான வேட்பாளராகக் கருதப்பட்டார்.[5]
சுல்தான் இல்லாத ஆட்சி
[தொகு]இதற்கிடையில், ராஜா அப்துல் சமாட் அரியணை ஏறுவதற்கு ஆதரவு அளித்தால், அரியணையின் பின்புலம் வழியாகத் தங்களுக்கும் அதிகாரம் கிடைக்கலாம் என்று ராஜா ஜுமாத் மற்றும் ராஜா அப்துல்லா ஆகிய இருவரும் உறுதியாக நம்பினார்கள். ராஜா ஜுமாத்; ராஜா அப்துல்லா ஆதரவுடன்; மேலும் நான்கு தன்னாட்சி மாநிலத் தலைவர்களின் ஆதரவுடன், ராஜா அப்துல் சமாட்டை சுல்தானாகத் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
ராஜா அப்துல் சமாட், பேராக் சுல்தான் என்று முறையாகப் பதவியேற்கும் வரையில், சிலாங்கூர் இரண்டு ஆண்டுகள் சுல்தான் இல்லாமல் ஆட்சியில் இருந்ததாகவும் பிற சான்றுகள் கூறுகின்றன. [5] எனினும், 1857-ஆம் ஆண்டு சுல்தான் முகமட் சா காலமான பிறகு சுல்தான் அப்துல் சமாட் ஆட்சிக்கு வந்தார்.
ஆட்சி
[தொகு]
அம்பாங் சுற்றுவட்டாரங்களில் ஈயச் சுரங்கங்களை சுல்தான் முகமட் சா வெற்றிகரமாக நிறுவினார். அதைத் தொடர்ந்து, சுல்தான் அப்துல் சமாட் நீரிணை குடியேற்றங்களுடன் வணிகம் செய்யும் நோக்கத்தில், ஈய உற்பத்தியை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொண்டார். சுல்தான் அப்துல் சமாட்டின் மருமகன்களில் ஒருவரான ராஜா அப்துல்லா பின் ராஜா ஜாபர் (Raja Abdullah bin Raja Jaafar); மற்றும் சீனர் காப்பித்தான் சீனா யாப் ஆ லோய் ஆகியோரின் உதவியுடன் ஈயச் சுரங்கங்கள் மேலும் அதிகமான அளவில் சீனச் சுரங்கத் தொழிலாளர்களை ஈர்த்தன.
1866-ஆம் ஆண்டில் சுல்தான் அப்துல் சமாட், ராஜா அப்துல்லாவுக்கு கிள்ளான் தன்னாட்சியில், முழுமையான அதிகாரத்தை வழங்கினார். இந்தச் செயல்பாடு, ராஜா அப்துல்லாவிற்கும் கிள்ளானின் முந்தைய நிர்வாகியான ராஜா மகிதிக்கும் இடையில் பகைமையைத் தூண்டி விட்டது. இந்தச் சர்ச்சைதான், பின்னர் காலத்தில் கிள்ளான் போருக்கு வழிவகுத்தது.[6]
கிள்ளான் போர்
[தொகு]கிள்ளான் போரின் போது சுல்தான் அப்துல் சமாட், தனது மருமகன் தெங்கு தியாவுதீன் சைனல் ரஷீத் (தெங்கு குடின்) என்பவரை இரண்டு முறை துணை யாம் துவானாக நியமித்தார். கிள்ளான் போர் காலத்தில், போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கு, தெங்கு குடினை ஒரு சமரசத் தூதுவராகவும் நியமித்தார். முதலில் சூன் 26, 1868 அன்றும்; மீண்டும் சூலை 22, 1871 அன்றும் சமரசத் தூதுவராக நியமித்தார். அதே நேரத்தில் அவர் சிலாங்கூர் மாநிலத்தின் நிர்வாகத்தையும் ஒப்படைத்தார்.
கிள்ளான்போரைக் கையாளுவதற்குத் தேவைப்படும் நிதியுதவிக்காக, தெங்கு குடினுக்கு லங்காட் நிர்வாகத்தையும் சுல்தான் அப்துல் சமாட் வழங்கினார். இந்தக் கட்டத்தில் தெங்கு குடின், பகாங் கூலிப்படையினர் உதவியையும்; மற்றும் நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் சர் ஆண்ட்ரு கிளார்க் என்பவரின் உதவியையும் நாடினார்.[7]
இதுவே மலாய் மாநிலங்களில் பிரித்தானிய நிர்வாகத்தின் முதல் கட்டத் தொடக்கமாகும். 1874-இல் கிள்ளான் போரில் வெற்றி பெற்ற பிறகு, சுல்தான் அப்துல் சமாட், கிள்ளான் ஆட்சி அதிகாரப் பொறுப்பை துங்கு குடினிடம் ஒப்படைத்தார். இருப்பினும் 1878-இல் தெங்கு குடின் அந்தப் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.[8]
பிரித்தானியர் தலையீடு
[தொகு]
ஒரு கட்டத்தில் சிலாங்கூரில், கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் அதிகமாக நடைபெற்றன. அதன் விளைவாக, நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் சர் ஆண்ட்ரு கிளார்க்கின் அறிவுரையின் பேரில், ஆகத்து 1874-இல், சுல்தான் அப்துல் சமாட்டின் நேரடி ஆலோசகராக பிராங்க் சுவெட்டன்காம் நியமிக்கப்பட்டார்.
அக்டோபர் 1875-இல் சுல்தான் அப்துல் சமாட், ஆண்ட்ரூ கிளார்க்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் சிலாங்கூர் மாநிலம் ஒரு பிரித்தானிய பாதுகாவல் பிரதேசமாக மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பங்கோர் உடன்படிக்கை
[தொகு]
அதைத் தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரான ஜேம்ஸ் கத்ரி டேவிட்சன் (James Guthrie Davidson) சிலாங்கூரின் முதல் பிரித்தானிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1874-ஆம் ஆண்டு பேராக் சுல்தானுடன் பங்கோர் உடன்படிக்கை 1874 கையெழுத்தான பிறகு இந்த நியமனம் உருவானது. மலாய் மாநிலங்களின் சுல்தான்களுக்கு, பிரித்தானிய ஆளுநர்கள் ஆலோசகர்களாகப் பணியாற்றும் மறைமுக பிரித்தானிய ஆட்சியின் தொடக்கத்தை இந்த நிகழ்வு குறிக்கிறது.[9]
சுல்தான் அப்துல் சமாட் ஆட்சியின் போது, செமினி, பெரானாங் மற்றும் புரோகா பகுதிகள் சிலாங்கூர் அதிகார வரம்பிற்குள் வந்தன. இருப்பினும், லுக்குட் தன்னாட்சி பகுதி மட்டும் 1880 சூலை 30 அன்று சுங்கை உஜோங் டத்தோ' கெலானாவிடம் ஒப்படைக்கப்பட்டது.[18][10] சுல்தான் அப்துல் சமாட்டிற்கு சர் என்ற பட்டத்தை வழங்கும் செயிண்ட் மைக்கேல் - செயிண்ட் ஜார்ஜ் (KCMG) விருது வழங்கப்பட்டது. சுல்தான் அப்துல் சமாட், ஜுக்ரா அரண்மனையைக் கட்டியபோது ஜுக்ரா நகரம் சிலாங்கூரின் அரசத் தலைநகரானது. அவர் 1875-இல் ஜுக்ரா நகரத்திற்கு குடிபெயர்ந்தார். 1880-இல் சிலாங்கூர் மாநிலத் தலைநகரம் கிள்ளானில் இருந்து கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.[11]
தம்புசாமி பிள்ளை
[தொகு]1893-ஆம் ஆண்டில் அவர், காப்பித்தான் யாப் குவான் செங் (Yap Kwan Seng), தம்புசாமி பிள்ளை மற்றும் லோக் யூ (Loke Yew) ஆகியோருடன் சேர்ந்து கோலாலம்பூரில் விக்டோரியா கல்வி நிலையத்தை (en:Victoria Institution) உருவாக்க உதவினார். அதன் பின்னர், சுல்தான் அம்ப்துல் சமாட் அந்தப் பள்ளியின் முதல் இரண்டு புரவலர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.
இறப்பு
[தொகு]சுல்தான் அப்துல் சமாட் 41 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, பிப்ரவரி 6, 1898 அன்று தனது 93-ஆவது வயதில் காலமானார். புக்கிட் ஜுக்ராவில் உள்ள சுல்தான் அப்துல் சமாட் கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவருக்கு இரண்டு மனைவிகள் மூலம் 12 குழந்தைகள்; 6 மகன்கள் மற்றும் 6 மகள்கள் இருந்தனர்.[12][13]
சுல்தான் அப்துல் சமாட் அவர்களின் அரியணை வாரிசான ராஜா மூடா ராஜா மூசா 1884-இல் காலமானார். எனவே அடுத்த வரிசையில் ராஜா மூடா ராஜா மூசாவின் மூத்த மகன் ராஜா சுலைமான் சா, சிலாங்கூர் அரியணையில் அமர்த்தப்பட்டார்.
நினைவகங்கள்
[தொகு]கோலாலம்பூர்; மற்றும் சிலாங்கூரில் சுல்தான் அப்துல் சமாட் நினைவாக சில இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
- சுல்தான் அப்துல் சமாட் கட்டடம், கோலாலம்பூர்
- சுல்தான் அப்துல் சமாட் பள்ளிவாசல், பெட்டாலிங் ஜெயா
- சுல்தான் அப்துல் சமாட் உயர்நிலைப் பள்ளி,
- சுல்தான் அப்துல் சமாட் பள்ளிவாசல், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- சுல்தான் அப்துல் சமாட் நூலகம், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kuala Lumpur History". Asia Web Direct. 2009. Archived from the original on 21 May 2009. Retrieved 25 June 2009.
- ↑ J.M. Gullick (1983). "Chapter 2: The State of Selangor". The Story of Kuala Lumpur, 1857-1939. Eastern Universities Press (M). pp. 8–29. ISBN 978-9679080285.
- ↑ J.M. Gullick (1983). "Chapter 4: The Selangor Civil War (1867-1873)". The Story of Kuala Lumpur, 1857-1939. Eastern Universities Press (M). pp. 17–23. ISBN 978-9679080285.
- ↑ Seng, Alan Teh Leam (2018-12-16). "Let's learn more about one of Selangor's greatest rulers, Sultan Abdul Samad | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Retrieved 2024-03-09.
- 1 2 "The History of Yap Ah Loy - The Death of Sultan Muhammad". Kongsi NetWorks. Tripod. 12 September 2000. Archived from the original on 12 செப்டம்பர் 2025. Retrieved 26 June 2009.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ J.M. Gullick (1983). "Chapter 2: The State of Selangor". The Story of Kuala Lumpur, 1857-1939. Eastern Universities Press (M). pp. 8–29. ISBN 978-9679080285.
- ↑ Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Marican. pp. 217, 222.
- ↑ James W. Gould (1 July 1974). The United States and Malaysia. Harvard University Press. pp. 64–66. ISBN 978-0674926158.
- ↑ James W. Gould (1 July 1974). The United States and Malaysia. Harvard University Press. pp. 64–66. ISBN 978-0674926158.
- ↑ Winstedt, R. O. (1934). "A History of Selangor". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. pp. 1–34. Retrieved 16 February 2025.
- ↑ "A History of Selangor (1766-1939) – Kawah Buku". Kawah Buku (002583797-T). Retrieved 16 February 2025.
- ↑ "Makam Sultan Abdul Samad". VisitSelangor.com. 14 April 2017. Retrieved 5 May 2017.
- ↑ "Sultan Abdul Samad died on 6 February 1898, at the age of 93, after reigning for 41 years". Universiti Putra Malaysia. Retrieved 16 February 2025.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.