சிலாங்கூர் மாநில அரசு
| State Government of Selangor Kerajaan Negeri Selangor | |
| துறை மேலோட்டம் | |
|---|---|
| அமைப்பு | 31 ஆகத்து 1957 |
| ஆட்சி எல்லை | |
| தலைமையகம் | சா ஆலாம் |
| ஆண்டு நிதி | RM 3 பில்லியன் (2025)[1] |
| அமைச்சர் | |
| அமைப்பு தலைமைகள் |
|
| மூல அமைப்பு | மலேசிய அரசாங்கம் |
| வலைத்தளம் | www |
சிலாங்கூர் அரசு அல்லது சிலாங்கூர் மாநில அரசு (மலாய்: Kerajaan Negeri Selangor; ஆங்கிலம்: Government of Selangor அல்லது State Government of Selangor) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் மாநில அளவிலான அரசாங்கம் ஆகும். மலேசிய கூட்டரசு அரசியலமைப்பை சிலாங்கூர் மாநில அரசு பின்பற்றுகிறது. சிலாங்கூர் மாநில அரசியலமைப்பு; மற்றும் மலேசிய கூட்டரசு அரசியலமைப்பு ஆகிய இரண்டு அரசியலமைப்புகளினால் சிலாங்கூர் அரசு உருவாக்கப்பட்டது.
மலேசிய கூட்டரசு அரசியலமைப்பு என்பது மலேசியாவின் உச்சநிலைச் சட்டம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரசியலமைப்பு என்பது சிலாங்கூர் மாநிலத்தின் உச்சநிலைச் சட்டமாகும். சிலாங்கூர் அரசின் தலைமை நிர்வாகம் மாநிலத்தின் தலைநகரான சா ஆலாமில் அமைந்துள்ளது.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் நிர்வாகப் பிரிவு மற்றும் சட்டமன்றப் பிரிவு என இரண்டு பிரிவுகள் உள்ளன. சிலாங்கூர் மாநில நிர்வாகப் பிரிவு எனும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு சிலாங்கூர் மாநிலத்தின் நிர்வாகத்தைக் கண்காணிக்கிறது. அதே வேளையில் சிலாங்கூர் மாநில சட்டமன்றம், மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது.
சிலாங்கூர் மாநிலத்தின் அரசாங்கத் தலைவர் மந்திரி பெசார் என்று அழைக்கப்படுகிறார். மலேசியாவின் நீதித்துறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படும் ஒரு கூட்டரசு நீதி அமைப்பாகும். அதன் காரணமாக சிலாங்கூர் மாநில அரசில் நீதித்துறைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படவில்லை.[2]
நிர்வாகி
[தொகு]அரசுத் தலைவர்
[தொகு]
சிலாங்கூர் மந்திரி பெசார் (Menteri Besar of Selangor)) என்பவர் சிலாங்கூர் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் என்று அழைப்பது வழக்கம். இவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் (Selangor State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.[3][4]
தற்போது சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் அமிருதீன் சாரி (Amirudin Shari). இவர் 19 சூன் 2018 முதல் மாநில முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.[5] சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, சிலாங்கூர் சுல்தான் முதலில் மந்திரி பெசாரை நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
அமைச்சரவை
[தொகு]சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு (Selangor State Executive Council) (EXCO) என்பது மலேசியா சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். சிலாங்கூர் சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிலாங்கூர் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். சிலாங்கூர் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை, மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.
2023 சிலாங்கூர் மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து, பாக்காத்தான் அரப்பான் (PH) மற்றும் பாரிசான் நேசனல் (BN) ஆகியவை மீண்டும் ஆட்சிக்கு வந்து ஒரு கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைத்தன. அதன் பிறகு, அமிருதீன் சாரி மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.[6]
கட்சி அமைவு
[தொகு]| பாக்காத்தான் அரப்பான் (10) | பாரிசான் நேசனல் (1) |
|
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Selangor govt tables RM3b state budget for 2025". The Sun. 15 November 2024. Retrieved 26 January 2025.
- ↑ Jeong Chun Hai @ Ibrahim, & Nor Fadzlina Nawi. (2012). Principles of Public Administration: Malaysian Perspectives. Kuala Lumpur: Pearson Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-349-233-6
- ↑ "Foreign investment bolstered by location, workforce". The Japan Times. 14 August 2019. https://www.japantimes.co.jp/2019/08/14/special-supplements/foreign-investment-bolstered-location-workforce/.
- ↑ Teoh, Shannon (25 September 2015). "KL opposition's alliance of hope". The Straits Times. https://www.straitstimes.com/asia/se-asia/kl-oppositions-alliance-of-hope.
- ↑ "Amirudin angkat sumpah MB Selangor, Rodziah dilantik EXCO". Berita Harian. 19 June 2018. https://www.bharian.com.my/berita/nasional/2018/06/439211/amirudin-angkat-sumpah-mb-selangor-rodziah-dilantik-exco.
- ↑ "Amirudin Shari is the new Selangor menteri besar". 19 June 2018.
மேலும் படிக்க
[தொகு]- Tricia Yeoh (2021). Will Pakatan Harapan's Hold on Selangor Continue? (PDF). Institute of Southeast Asian Studies. ISBN 9789814951449.