சிலப்பதிகார நடனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிலப்பதிகாரத்தில் மொத்தம் 11 வகை நடனங்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது. அவற்றில் ஆறு வகைகள் நின்று கொண்டு ஆடுவனவாகவும் ஐந்து வகைகள் வீழ்ந்து ஆடுவதாகவும் உள்ளன.

வகைகள்[தொகு]

 • அல்லியம் - கண்ணன் யானையின் கொம்பை ஒடித்ததைப் பாடி ஆடுதல்.
 • கொடுகொட்டி - சிவ நடனம். முப்புரம் எரித்த போது அதைக்கண்டு மகிழ்ந்து கைகொட்டியபடி ஆடிய ஆட்டம். இதை கொடுகொட்டிச் சேதம் என்றும் கூறுவர்.
 • குடைக்கூத்து - முருகன் அசுரரை வென்று ஆடிய நடனம். காவடியாட்டத்தின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
 • குடக்கூத்து - திருமால் தன் பேரனான வானன் என்பவனை அசுரனின் சிறையில் இருந்து மீட்க ஆடிய ஆட்டம். கரகாட்டத்தின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
 • பாண்டரங்கம் - திரிபுரம் எரித்து சாம்பலாக்கப்பட்ட பிறகு சிவனாடிய ஆட்டம்.
 • மல் - கண்ணன் வாணன் என்ற அரக்கனை மல்லாடிக் கொன்றது.
 • துடியாடல் - முருகன் சூரபதுமனைக் கொன்று உடுக்கை (துடி) கொண்டு ஆடிய பாடல். இதில் கடலே அரங்கமாக கொள்ளப்பட்டது.
 • கடையம் - வாணன் என்னும் அரக்கனின் வயலில் இந்திராணி உழத்தி வடிவத்தோடு ஆடிய உழத்திக்கூத்து. கடைக்கூத்து என்றும் கூறுவர்.
 • பேடு - காமன் பேடாகி ஆடிய நடனம்.
 • மரக்கால் - காளி மரக்காலை உழக்கி அசுரர் ஏவிய பாம்பு, தேள் முதலியவற்றை எதிர்த்து ஆடியது.
 • பாவை - திருமகள் ஆடிய மோகினி ஆட்டம். பாவைக்கூத்தாகிய பொம்மலாட்டம் எனக்கருதப்படுகிறது.

மூல நூல்[தொகு]

 • சுரா இயர்புக், 2012.